Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை வினியோகம் செய்வது எப்படி?


        வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சீட்டுகள், ஒப்புதல் பெற வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய முழு அசல் கையொப்பத்தை போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.

10th ( SSLC ) - March 2014 Public Exam Official Key Answer

March - 2014 Official Key Answers

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,126 அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது

          திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ் தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993 பேர், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர், திருநங்கை வாக்காளர் கள் 107 பேர் என்று மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர்.
 

10ம் வகுப்பு: விடைத்தாள் இன்று முதல் மதிப்பீடு.

          பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி.

          வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும்13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

SSLC கணித வினா கடினம் அல்ல! - பாடசாலை வாசகர் குணசேகரன்


           பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வுத்தாள் கடினமானது அல்ல.செய்முறை மற்றும் வரைபடம் கேள்விகள் மிகவும் எளிது.5 மதிப்பெண் கேள்வியில் வெண்படம்,சார்பு,இயல் எண்களில் வர்க்கம்,பகடை,அணி,நாற்கரத்தின் பரப்பு,பகடை இந்த கேள்விகளை சுமாரான மாணவர்கள் கூட எளிதாக விடையளிக்கலாம்.2 மதிப்பெண் வினாக்களில் குறைந்தபட்சம் 10 க்கு 4 வினா எளிதாக எழுதலாம்.1 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின் கொடுக்கப்பட்ட வினாக்களிலிருந்துதான் கேட்கப்படுகிறது,அவ்வினாக்கலை செய்து பார்க்கவேன்டிய அவசியம் இல்லை .இந்த கேள்விக்கு இந்த விடை என்று நினைவில் வைத்து எழுதினாலே குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
 

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

             தமிழக அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2014 முதல் அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.
 

விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை


           தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.
 

வாக்குச் சாவடிக்குள் வாக்காளர் செல்போன் கொண்டு செல்ல தடை

            வாக்குச் சாவடிக்கு வோட்டு போடச் செல்லும்போது வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்லக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை வினியோகம் செய்வது எப்படி?

          வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சீட்டுகள், ஒப்புதல் பெற வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய முழு அசல் கையொப்பத்தை போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.

"பூத் சிலிப்" வழங்கும் பணி இன்று துவக்கம்


          "வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிந்துள்ளது.


வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஓட்டுபெட்டியை பாதுகாப்பது எப்படி?

           வாக்குப்பதிவு முடிந்து 3 வாரங்களுக்கு பிறகுதான் அதாவது மே 16ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை மின்னணு ஒட்டுப்பெட்டிகளை பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும்.  

உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள்
FREEMEM=SPACE(64000000)

தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு

          பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு

தேர்தலில் வாக்களித்தால் பெட்ரோல் பங்கில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி

         இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய இதற்கு மேல் வலியுறுத்த முடியாது. ஏனெனில் பிரபலங்கள், கார்பரேட் நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் இந்த தேர்தலில் வாக்க்காளர்கள் தங்கள் கடமையை செய்ய பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பு - TNPSC தேர்வுகளுக்காக


1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை). 
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' 

தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்


          நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவதாலும், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு!

           “உங்கள் மனதில் என்ன இருக்கிறது?” என்பதை பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். “புதிதாக உள்ளதைப் பகிர்க…” என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நீங்களும் நட்பு, காதல், மொக்கை, சினிமா என்று பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. பெரும்பான்மையினரும் அப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மே மாதம் முதல் பிஎஸ்என்எல் இன்டர்நெட் வாடகை உயர்வு:

சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

           வீடுகளுக்கான தொலைபேசியுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை திட்டங்களுக்கான ஊரக திட்டம் & 500, 950 ஆகியவற்றுக்கான மாதந்திர வாடகை மே 1ம்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

இலவச இன்டர்நெட்: ஏர்டெல் புதிய சேவை

           வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களை அறியும் பொருட்டு ஏர்டெல் நிறுவனம் இலவச இன்டர்நெட் சேவையை தந்துள்ளது.
 

12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்.


        வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவிர12 இதர ஆவணங்களில் ஒன்றியை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

சி.எம்.எஸ்., தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் - யு.பி.எஸ்.சி அறிவிப்பு.

             UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

            வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன.

ஒவ்வொரு தேர்விலும் 1.5 கோடி பக்க விடைத்தாள் வீண்.

               பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
 

SSLC - பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பாடம் - கணிதம்!


            தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.


முடிந்தன பொதுத்தேர்வுகள் தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்

             பள்ளி பொதுத்தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி, 20ம் தேதி வரை, 66 மையங்களில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால், இரு தேர்வுகளிலும், தேர்ச்சி, 90 சதவீதத்தை தாண்டும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை.


          பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது.
 

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு.


           ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தைஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான்


         செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பாதையில் மங்கள்யான் விண்கலம் பாதி தொலைவைக் கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(இஸ்ரோ) அறிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்

        அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
 

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மிக, மிக எளிமை

       'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில்,கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மிக,மிக எளிமையாக இருந்தன.இதனால்,சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட, 75 சதவீத மதிப்பெண் பெறலாம்,' என மாணவர்கள் கூறினர்.

கல்விக்கடன் பெற பணிந்து போக வேண்டுமா?

         வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக வேண்டியது அவசியம் என, வங்கி அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்' என, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவின், முன்னாள் உறுப்பினர், மோகன் தெரிவித்துள்ளார்.
 

தபால் ஓட்டு போடாதவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை

         தபால் ஓட்டு போடாதவர்கள் மற்றும் செல்லாத ஓட்டு போடுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive