Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்

           அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது.
 

ஓட்டுப்பதிவு நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.

           லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு, ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

         கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 

இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்

         கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்… நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள். டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை அளித்த ஆசிரியர்கள்

          ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கான டெபாசிட் தொகையை வழங்கினர். இதுதொடர்பாக பொதுப் பள்ளிக் கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை:

TET Court Case Detail


          இன்றைய டி.இ.டி வழக்கில் ஆஜராக வேண்டிய அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை என்பதால் வழக்கு மீண்டும் 01.04.2014 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்

       இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ள விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணியை  ஆஸ்திரேலியா துவக்கியுள்ளது.

பிளஸ் 2 கணித தேர்வில் அச்சுப்பிழை: மறு தேர்வு கோரிய மனு தள்ளுபடி.

 
         பிளஸ் 2 கணித தேர்வில், அச்சுப் பிழையுடன் வினா இடம் பெற்றதால், மறு தேர்வு நடத்த கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
 

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு

          பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

           இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்.

மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஐந்தாம் வகுப்பு, மாணவர்கள் கற்றலில், அடைந்த திறன் குறித்து, தமிழ், கணிதம், சூழ்நிலையியல், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மாணவர், இரண்டு பாடத்தில் தேர்வெழுத வேண்டும். அதுமட்டுமன்றி, பள்ளி, ஆசிரியர்,மாணவர் விபரங்களையும், அதற்கு என வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில், 275 பள்ளிகளில் இந்த அடைவுத்திறன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், ஏப்ரல் 10,11,15,16 ஆகிய தேதிகளில்,நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

          காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவுசெய்துள்ளது.

TET-PG:Important Case list(26.03.14)

26.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்.

தமிழ், ஆங்கிலத்தில் 'நோட்டா': ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்.


         ஓட்டு சீட்டில், 'நோட்டா' (யாருக்கும் ஓட்டு இல்லை) என, தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது.
 

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

         'இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

   "பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.

அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

TET Case update News (25.03.14)


            சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (25.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. விசாரணை 26.03.14 ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் இறுதி விடக்குறிப்பு தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.

            சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் இறுதி விடக்குறிப்பு தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் வினா எண்கள் 45, 70 and 104 க்கு டிஆர்பி யின் இறுதி விடக்குறிப்பு தவறு என கே ஆர்விஜயா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நாகமுத்து அவற்றுக்கு Trb வெளியிட்ட இறுதி விடக்குறிப்பு (final key ) சரியே எனக் கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை.


           தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .

TNPSC:துறை தேர்வுகள் அறிவிப்பு


              2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TRB | TET | TNPSC - Free Online Quizes Available Now.

           TRB | TET | TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் பல்வேறு இலவச ஆன்லைன் வினா விடைகள் Quiz Format -ல் www.TrbTnpsc.com வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பார்வையிடுங்கள்! பயன் பெறுங்கள்!

வெயில் தாக்கம்: 1/2மணி நேரம் முன்னதாக தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

           8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நாளை (26–ந் தேதி) தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.

கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

          பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

                எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. 

TNPSC-GROUP I: குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு


           டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் 25 முதல் 27-ஆம் தேதி வரை குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது. 

44 நிகர்நிலை பல்கலைகள் அந்தஸ்து தப்புமா?

            நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, "நாக்" குழுவின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு பாடத் திட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.இதில் 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள்.

          வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
 

செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம்.

          வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற சேவையை சென்னையி்ல அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ் மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம்.

சேற்றில் சிக்கி மாணவி மரணம்; தலைமையாசிரியர் உட்பட மூவர் “சஸ்பென்ட்”

              தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர்.
 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது. 
 

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

         அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.


         11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆதார் அடையாள அட்டை

        அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive