Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

சிறப்பான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்துவோம்’: கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு 

ஒரு கல்வி ஆண்டு முடிந்து, இன்னொரு கல்வி ஆண்டு தொடங்கும் நேரம் நெருங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு பள்ளி, கல்லூரி, சீருடை, புத்தகம், நன்கொடை என்ற சொற்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். அதேபோல், அதிக கட்டண வசூல், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியலை வெளியிட மறுப்பு, 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு என்ற செய்திகளும் வெளிவரும்.

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

                     பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுபெறுபவர்களின் உத்தேச எண்ணிக்கை விவரம்

192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பதவி

உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

"இ-பே ரோல்' முறையிலுள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்


அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் "இ-பே ரோல்' முறையை சீரமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.

பணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்

போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணய குழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன. குழப்பங்களை எப்படி தீர்ப்பது என, கல்வித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்


ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

MBBS விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், 100 மாணவர்களை சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ், ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை தரும் வகையில், இத்திட்டம் அமலாகிறது.

பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 95 சதவீத தேர்ச்சி இலக்கை நோக்கி, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூjன் 28ல் நெட் தகுதி தேர்வு - உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் நெட் தகுதி தேர்வு


அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறை சிபிஎஸ்இ ்) நடத்தியது.

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிப்பு

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் புத்தக நிலையங்கள் மற்றும் பள்ளிகளில்தான், பெற்றோர்கள் அதிக விலைக்கு புத்தகம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிச் சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி: தமிழக அரசு நிதியுதவி...

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்த இரு மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
12 கோரிக்கைகள் அரசு ஏற்று கொண்டதால் சத்துணவு ஊழியர்கள்  போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதால் பள்ளி மாணவர்களுக்குத் தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2010 மே சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்கள் டி.இ.டி தேவையில்லை வழக்கு நாளை இறுதி விசாரணை

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது. கோர்ட் எண் 2 இல் வழக்கு எண் 45 ஆவதாக இடம் பெற்றது
Thanks To
Mr.Abi murugadass

ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்


தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 19-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 18-ஆம் தேதியும்
தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு கால அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!

ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் சேர்க்கப்படும். 

சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு?

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால், சத்துணவு சமைத்துப் போடும் பணி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். 

பாடசாலை வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தம்புது பொலிவே! புத்தாண்டுப்பூவே!
சித்திரைக் கனவே! வரதேவதையே!
வருடம் தவறாமல் புதுவாசம்கொண்டு வாராயோ!
வல்லமை பலதந்து வலிமை தரவந்தாயோ!.

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் 21.04.2015 அன்று இறுதி விசாரணையில் இடம்பெற்றுள்ளது

SUPREME COURT OF INDIA

Case Status Status : PENDING

Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தல்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான வழக்கு: 21-ல் விசாரணை - Dinamani

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 
நடக்கும் என மற்றொரு சங்கமான  தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.

சத்துணவு ஊழியர்கள் - அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன்

சத்துணவு ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசு
பேச்சுவார்த்தை நடத்தியது.

TET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அரசு செவிசாய்க்குமா?


  ஆசிரியர் மாறுதல்  தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?

By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதம்மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "குரு ஹர்க்ரிஷண்' என்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொலைதூர கல்வி தேர்வுபல்கலை அறிவிப்பு மதுரை காமராஜ் பல்கலை

தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும். இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே 16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு துவங்குகிறது.எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புக்கு ஏப். 27 க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மே 27 ல் தேர்வு துவங்குகிறது.

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்


நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive