Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

                எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. 

TNPSC-GROUP I: குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு


           டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் 25 முதல் 27-ஆம் தேதி வரை குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது. 

44 நிகர்நிலை பல்கலைகள் அந்தஸ்து தப்புமா?

            நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, "நாக்" குழுவின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு பாடத் திட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.இதில் 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள்.

          வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
 

செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம்.

          வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற சேவையை சென்னையி்ல அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ் மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம்.

சேற்றில் சிக்கி மாணவி மரணம்; தலைமையாசிரியர் உட்பட மூவர் “சஸ்பென்ட்”

              தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர்.
 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது. 
 

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

         அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.


         11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆதார் அடையாள அட்டை

        அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

             அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

Income Tax - விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

           வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது


7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

http://finmin.nic.in/7cpc/index.asp

Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf

சென்னை பல்கலையின் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று வெளியிடப்படுகிறது.


            சென்னை பல்கலையின் முதுகலை பட்டம், நூலகவியல் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று இரவு வெளியிடப்படுகிறது.இதுகுறிதது சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

TET | TRB Court Case Detail

            25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

   தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும்(2014-15) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது:

TNPSC முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று சென்னையில் துவங்கியது.

         TNPSC: 5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.

முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

           நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

           பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்கத்தில் முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள் திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.

தமிழக பள்ளிகளில் மதிப்பீடு முறை பற்றிய கட்டுரை; புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாமா?

          கடந்த 2009ல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'கன்டினுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவால்யுவேஷன்' (சி.சி.இ.,) எனப்படும் மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்தது. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், இந்த மதிப்பீட்டு முறை, முந்தைய முறையை விட சிறந்தது என்ற, காரணத்தால் இதனை வலியுறுத்தினார்.
 

நாளை 10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து

           ''நாளை, 10ம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள, 7.31 லட்சம் மாணவ, மாணவியருக்கு, தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - நீர்


#நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8

# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1

TNPSC GK IMPORTANT DAYS

ஜனவரி

12-தேசிய இளைஞர் தினம்

239 பயணிகளுடன் காணாமல் போன விமானம் : மலேசிய பிரதமர் முக்கிய அறிவிப்பு

       கடந்த 8ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங் சென்றது மலேசிய விமானம். விமானத்தில் சென்ற 239 பேரில் சென்னையைச்சேர்ந்த  ஒருவர் உட்பட 5 பேர் இந்தியர்கள்.

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்-Dinamani News

         தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள்,

TNTET-2013:விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்


          கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

TNTET - WEIGHTAGE - IN DETAIL


OMR விடைத்தாளில் பென்சிலும் பயன்படுத்த அனுமதி

          தேர்வு நாள் 25.03.2014 - கணினி அறிவியல் பாடம் - OMR  விடைத்தாளில் கறுப்பு அல்லது நீல நிற மை பந்துமுறை போனவினால் (Ball Point Pen)  வட்டங்களை Shade செய்வது - பென்சிலும் பயன்படுத்த அனுமதி - Click Here

பவர்கட்... படிப்பும் 'கட்!'; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இணையதளத்தில் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்

           இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் திருத்தும் பணி - தேர்வுத்துறை உத்தரவு

           திண்டுக்கல்: "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. 
 

10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்

               பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, 12 மணிக்கு முடிகிறது. பொது தேர்வுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive