Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ விடுப்பு எடுத்த முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்வது குறித்து வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு click  செய்யவும். 

ஊதிய குறை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அளிப்பது குறித்து அரசு அறிவிப்பு


வழக்கு தொடர்ந்த தொடராதா தனி நபர், துறைத்தலைவர் மற்றும் சங்கங்கள் மனுக்களை அளிக்க தங்கள் விவரங்களை பதிவு செய்ய அரசு அறிவிப்பு .

தேர்வுத்துறையில் 50 இடங்களில் கேமரா பொருத்த முடிவு.


தேர்வுத்துறை இயக்குனரகத்தை பாதுகாப்பு மிகுந்த பகுதியாகவும், முக்கிய பணிகள் நடைபெறும் பிரிவுகளில், 50 கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 2.50லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 1 2012 முதல் ஆசிரியர் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் பதிவு.


ஆசிரியர்களின் செயல்ப்பாட்டினை முறையாக கண்காணிப்பதற்கு அவர்களுடைய வருகைப் பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம்  கண்காணிப்பதற்கு கணினி பயன்ப்பாட்டு   மென்பொருள் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளான 2012, ஜூன் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாதோரின் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் தலைமையாசிரியர் மையக்கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பி பதிவு செய்வார். அங்கிருந்து வருகைப் பதிவுசார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்து ஒழுங்குப்படுத்த உதவும்.

மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் - அஞ்சும் நடப்பாண்டு மாணவர்கள்-19-04-2012


சென்னை: கடினமான இயற்பியில் தேர்வால், இந்தாண்டு மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்தால், நடப்பாண்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இதன்மூலம் கடந்தாண்டு மருத்துவ இடம் கிடைக்காமல், வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அதைவிட்டுவிட்டு, மீண்டும் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள்


கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது.

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 10 நடமாடும் மையங்கள்


         பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக 10 நடமாடும் மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

கல்விக்கென்றே புதிய சேனல்: அமைச்சர்.


கல்விக்கென்றே ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு துவக்கவுள்ளது.
இத்தகவலை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது: இதன்மூலமாக, பள்ளி முடிந்தபிறகும், பாடங்களை வீட்டிற்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்.
செமினார்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் உள்பட, கல்வித்திறனை அதிகரிக்கும் பலவிதமான அம்சங்களை இந்த சேனல் கொண்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் சிவபதி தெரிவித்தார்

School Reopen GO = Director Proceeding

SCHOOL REOPENS ON 01.06.2012 AFTER SUMMER VACATION. DOWNLOAD THE ATTACHMENT REGARDING SCHOOL REOPENING  AND FOLLOW THE INSTRUCTIONS


Click Here & Download Director Proceeding.

அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம்


            தமிழகம் முழுவதும் அரசு பாடநூல் புத்தகங்களை, தனியார் பள்ளிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், ஆயாக்கள் பணியிடங்களுக்கு சத்துணவு மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருப்பவர்களைதான் நியமிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும்


சத்துணவு ஊழியர்கள் நியமனத்துக்கு அரசு விதித்த நிபந்தனை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
விழுப்புரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை : கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்ய பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழு *** 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380 பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நியமனம்.

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழக அரசு காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி அளித்துள்ளது. எனவேமாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவசங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மனு-18-04-2012


             புதுடில்லி: தனியார் பள்ளிகளில் படிக்கும் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இலவசங்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 299 படிப்புகள் அறிமுகம்!-18-04-2012


         சென்னை: தமிழகத்திலுள்ள 51 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில், 299 கூடுதல் படிப்புகள் தொடங்கப்படவுள்ளன.

காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கு 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்-18-04-2012


         சென்னை: தமிழ்நாடு போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடியோ சி.டி. வெளியீடு இலவசமாகப் பெற "நேத்ரோதயா' அமைப்பை 044-26530712 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்..




















                          ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்
திறனாளிகளுக்கான ஆடியோ சி.டி.யை மாநில சட்டத்துறைச் செயலாளர் ஜெயச்சந்திரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
"நேத்ரோதயா' அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த சி.டி.க்கள் 300 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கல்ப் ரெட் கீழாடை மற்றும் வெள்ளை நிற மேலாடை என தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறதா?


தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது.


தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும், மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்றன.

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்.


தமிழகத்தில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைப் பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னைக்கு வருகை.



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதிலும் இருந்து, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்படுகின்றன.

அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுதல் தன்னார்வம் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ககோருதல்.


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 2199 / ஆ3 / 2012, நாள். 16.4.2012 
அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலை அல்லது உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முதற்கட்டமாக மே 1 முதல் 5 வரையும், இரண்டாம் கட்டமாக 7 முதல் 11 ஆகிய நாட்களில் கோடைகால பயிற்சி நடைபெற உள்ளது.

விளையாட்டுப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழக விளையாட்டுப் பள்ளி, விடுதியில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி, விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவிகள் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

மனிதநேய அறக்கட்டளையின் நுழைவுத் தேர்வு.


மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் 2012ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கும், குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

17 ஆயிரம் மாணவருக்கு லேப்டாப் வழங்க இலக்கு.


"நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, விழாவில் தமிழக சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.

மாற்று திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் சட்டத்திருத்தம்


கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சேரும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருப்பவர்களின் குழந்தைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் சேர, வழிவகை செய்து, கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர ஆசிரியர்கள் கோரிக்கை.



பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய விடைத்தாள் திருத்தும் மையங்களை, மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில் கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்காளாக தரம் உயர்த்தி தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து ஆணை வழங்குதல்.


தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 00307 / இ 1 / 2011, நாள். 12.01.2012
கூடுதல் பட்டதாரி ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் பொருட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் சார்பான ஆசிரியர் மாணவர் நிர்ணய அறிக்கையின்படி கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அரசானை நிலை எண் . 100 பள்ளிக்கல்வித் துறை நாள். 27.06.2003 ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு இயக்குனரின் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் தேவையுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு பகிர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுகிறது.

CONTINUOUS & COMPREHENSIVE EVALUATION - DETAILS OF TEACHERS CALLED FOR IN FORMAT III- VERY URGENT - BEFORE 5.00 PM ON 16.04.2012



ALL GOVT/MPL/ADW/SW/AIDED/UNAIDED/MATRIC/ CBSE HIGH & HR.SEC.SCHOOL HEADS,

KINDLY DOWNLOAD THE PROCEEDINGS  OF THE CHIEF EDUCATIONAL OFFICER AND FOLLOW THE INSTRUCTIONS. HANDOVER THE FORMAT-III IN PERSON ON 16.04.2012 BEFORE 5.00 PM IN CHIEF EDUCATIONAL OFFICE, VELLORE.

CEO, VELLORE.


மாநில மொழிகளில் மத்திய பணியாளர் தேர்வுகள்.


சென்னை, ஏப். 14 : மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இனி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ள யுபிஎஸ்சி தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும், படிப்படியாக கீழ் நிலை மற்றும் இடைநிலை பதவிகளுக்கான தேர்வுகளிளும் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2012-13ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive