Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்

         தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை படிப்புகளுக்கு இதுவரை 1,840 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது.சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 969 புதிய பணியிடங்கள்

          அரசு மருத்துவ கல்லுாரிகளில், 969 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு, கோவை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 மாணவர் சேர்க்கையுடன், மருத்துவ படிப்பு துவங்க, மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது; அதன்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

"குதிகால் வலி ஏற்படுவது ஏன்?"

          தரையில்கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து விடுப்பு எடுத்து பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

7 மலைகிராம பள்ளிகளில் 29-ம் தேதி முதல் சத்துணவு

ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் செயல்படும் 7 தொடக்கப்பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல் சத்துணவு வழங்க மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆணை பிறப்பித்துள்ளார். 

பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு ரூ. 980 கோடி :மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் தகவல்

         பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு ரூ. 980 கோடி ஒதுக்கியிருப்பதாக, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் டி. ராமசாமி தெரிவித்தார்.

மின் துறை, பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

       காரைக்கால் மின் துறை, பள்ளிகளில் புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். மின் துறை அலுவலகத்தில் உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்களிடம் விளக்கம் கோருமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

இளம் விரிவுரையாளர் தேர்வுக்குரிய விண்ணப்பத்தை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையில்  வலியுறுத்தப்பட்டு, அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டுமென  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வகுப்பறைக்குள் புகுந்த நாய்: 3 பேர் காயம்

            வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய் மாணவர்களை கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 
 

பெண்கள் பள்ளியில் ராகிங்: மாணவி தற்கொலை முயற்சி: மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை

கரூரில் தனியார் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 மாணவியை மற்ற மாணவிகள் ராகிங் செய்ததால் அம்மாணவி புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.

புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது.

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

ஆசிரியர் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில அளவில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மே மாதம் நடத்தப்படும்.

TNPSC - VAO Certificate Verification Schedule

தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:

பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

குழந்தைகளுக்கான அறிவுக்களஞ்சியம் விருது: போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்யலாம்.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 27-ஆவது அறிவுக் களஞ்சியம் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 7-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை 25 ஆண்டுகளாக உயராததால் விரக்தி.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை, 25 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால், அதில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது. தமிழகத்தில், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 1991ம் ஆண்டு முதல், ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

அறிமுகம் - `அம்மா வை-பை?`.

            தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை.

             அவன் பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். 
 

பூமிக்கு அடியில் உறங்கும் பூகம்பம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இனி "பாஸ்வேர்ட்" நினைவில் வைக்க வேண்டாம்.

           மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனபடும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன.
 

சேலம் ஆவின் நிறுவனத்தில் மேலாளர், ஓட்டுநர் பணி.

             சேலம் ஆவின் நிறுவனத்தில் மேலாளர், ஓட்டுநர் பணி சேலம் ஆவின் நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணி.

             கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான பொது மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர் டிஓ) 233 விஞ்ஞானி, இன்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி வேளாண்மைபடிப்புகளுக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு.

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture),  இளநிலைஅறிவியல் செவிலியர் (B.Sc. Nursing),  மற்றும் இளநிலை மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (Random Number) புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Vellore District Primary Schools Calendar


2 ஆசிரியர்களின் நல்லாசிரியர் விருது பறிப்பா?

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளிஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive