Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகர கொட்டகையில் செயல்படும் ஆசிரியர் பல்கலை!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தகர கொட்டகையில் செயல்படுவதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஏழு அரசு கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட, 705 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. 

அனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு

      தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. 
 

விநாயகர் சிலைகளை கரைப்பது ஏன் ?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

Important Clue to Finding the Problem


Teachers Wanted!


8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

        இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:


"ஆப்பிள்" :அனைவரிடத்திலும் இனி 'ஐபோன்'

          பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்களையும், முன்னணி தொழிலதிபர்களையும் சந்திக்க உள்ளார்.

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.
மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.

விநாயகர்சதுர்த்தி - பற்றி தெரிந்து கொள்வோம்

          விநாயகர் சதுர்த்தியான இன்று வழிபாட்டில் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடுவோம். இதற்கான காரணம் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை அகத்தியர் கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார். 
 

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை கைவிடக் கோரிக்கை

          முதல் பருவத் தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்பதால், தேர்வு முடிந்த பின்பு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.

செப்டம்பர் 21 முதல் 10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு

      காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புத் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற 21 முதல் 23-ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு நிதியுதவி

          2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 10 புதிய விடுதிகள்

         ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 10 புதிய விடுதிகள் தொடங்கப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர் என்.சுப்பிரமணியன் அறிவித்தார். 
 

சிபிஎஸ்இ பள்ளிக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம்

          தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) பள்ளி நிர்வாகிகளின் சங்கம் பதில் அளிக்க 2 வாரம் கூடுதல் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் இன்று அளித்தது.


கைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

         சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது.


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..!

மாவு தயாரிப்பு
கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா?

இணையதளம் மூலம் பொருள்கள் வாங்க எஸ்.பி.ஐ.யின் தனி கடன் அட்டை அறிமுகம்

         இணையதளத்தின் மூலமாக பொருள்களை வாங்குவதற்கான பிரத்யேக கடன் அட்டையை (simply click credit card) புதன்கிழமை அறிமுகப்படுத்தியது பாரத ஸ்டேட் வங்கி.இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:

 

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

        பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வருகிற 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனை மாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு

            தமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வு உள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின. 
 

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாகமத்திய அரசின் விஞ்ஞானிகள்: தலா 100 மணி நேரம் வகுப்பு

         பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து தொழில்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகின்றனர். 
 

MPhil Dept Permission - Power Delicated to AEEO

       தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 11/2014)

Director's Proceedings

  1. Partime/Evening Class/Distance Education MPHil Dept Permission - Power Delicated to AEEO - Click Here


ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்தும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் பள்ளி

       இங்கிலாந்து அருகே உள்ள "தீபகற்ப" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள பள்ளியில் பணியாற்ற ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் சம்பளம் கொடுப்பதாகக் கூறியும்  ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம்.


12th Quarterly Exam Answer Key

பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்.

         உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங்கை விரைவில் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதன் மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.


இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.

           தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, முற்றுகைப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் தலைமையில், அரசுப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யலாம் மத்திய அரசு உத்தரவு

        நேர்மை இல்லாத, திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விரைவில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்: துணைவேந்தர் க. பாஸ்கரன்

        கிராமப்புறத்தைச் சேர்ந்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.இந்தப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:


மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை

     மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளை ஆசிரியர்கள் களைய வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் பி.ஜார்ஜ் பால் வலியுறுத்தினார்.


பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

          அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது. 

பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!

        தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன. 

உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 293-ஆவது இடம்

                உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களில், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive