Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை

        பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தும் முறையை மாற்றி ஆன்லைன் விசாரணை முறையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணி நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது.

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

      ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்

       சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், 418 பேர்; சமச்சீர் கல்வியில் பயின்றவர்கள், 33 பேர். ஆந்திராவில், 3,204 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.


கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க... அனுமதி:உயர் கல்வி துறை செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,” என்று யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. 

சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.

        பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே  பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

      அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

         தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

       தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

        உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

         ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3  நாட்களில் பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள்  முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர். 

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

        ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்,  உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள். 

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

        அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

        தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம்

         சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

"80 சதவீதத்தினருக்கு ஹெபடைட்டிஸ் - சி அறிகுறிகளே தெரியாது'

      ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர் பாசுமணி தெரிவித்தார்.
 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

         தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.

இன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு

        எம்.சி.ஏ., படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். 
 

CEO & DEO Meeting

          பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தண்ணிய போட்டா... தடங்கல் இல்லாம போகலாம்: 1 லிட்டர் நீரில் 500 கி.மீ., பறக்கும் 'பைக்!'

      ''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான் இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும் இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார்.

மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும் ; ஆய்வில் தகவல்.

        மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல்.

      மாணவர்களிடையே இன்றைய காலகட்டத்தில் போதைப் பழக்கம் போல் ஆபாச படம் பார்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டு உள்ளது சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை தங்கள் செல்போன்மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக ஆயுவு மூலம் தெரியவந்துள்ளது.

மெக்ஸிகோவில் நடைபெறும் அறிவியல் மாநாட்டுக்கு கரூர் அரசு பள்ளி தேர்வு

 கரூர்: குஜராத் மாநிலத்தில் உள்ள டிசைன் பார் சேஞ்ச் என்ற தனியார் நிறுவனம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையிலான எளிமையான திறன் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் அடையாளம் காட்டி வருகிறது.  
 

சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

      இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்ட செய்திக்குறிப்புதிண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு 290 சமையல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

கார்கில் போர் வெற்றி தினம்



      15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று. "போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும் விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்கு. நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வாய்ப்பு! தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்

"ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, "ஆன்-லைன்' வாயிலாக திருத்த முடியாதவர்கள், தபால் மூலமாக அனுப்பி, திருத்தம் செய்யலாம்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள்.

         இதை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவனின் கையில் கொடுத்து வீட்டிலும் , பள்ளியிலும் பன்முறை வாசிக்க செய்வதின் மூலம் கற்றவை மறக்காமல் இருப்பதுடன், மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனும் மேம்படும்.

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

     தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

          வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ஆன்-லைன்மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என வருமான
வரித்துறை அறிவித்துள்ளது.

50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறி

       பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive