Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு.

            கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை முழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை?

            இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன.

தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம்


இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின், மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது; அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. 

தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்வி புகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

          ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில்   தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின்  தலைவர் புனியா பாராட்டு  தெரிவித்துள்ளார்.  தேசி்ய ஆதிதிராவிடர்  ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர். 

கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி.

          கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி   உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.

தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி!

         தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது. 


REGULARISATION ORDER

            முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

யு.ஜி.சி. விதிகளின் 12 பி அந்தஸ்து பெறாததால் 5 ஆண்டுகளாக வழங்கிய பட்டங்கள் செல்லாமல் போகலாம்: அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆசிரியைகள் குற்றச்சாட்டு

          பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 12 பி அந்தஸ்து பெறாததால் 5 ஆண்டுகளாக வழங் கப்பட்ட பட்டப் படிப்பு பட்டங்கள் செல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
 

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு: 9 நாட்களில் 32,640 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

         சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் கடந்த 9 நாட்களில் 32,640 மாணவர் களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: புதிய திட்டத்தை அமைச்சர் பழனியப்பன் தொடங்கிவைத்தார்

         வேலைக்கு தயார்படுத்தும் வகை யில் 10 ஆயிரம் பொறியியல் மாண வர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.


இலவச பை விநியோகத்துக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டது ஏன்? - தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் விளக்கம்

        அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பைகள் தயாரிப்பதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தகுதி இல்லாததால் மறுஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.
 

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு நிதி

        மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு

       மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.
 

இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்களை சரிபார்க்க வாய்ப்பு

         இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்களை சரி பார்த்துக்கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப் 1 பதவியில் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு

POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)

      குரூப் 1 பதவியில் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான, முதன்மை தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க பிரத்யேக சிகிச்சை குழு

         அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குழந்தைகள் நலக்குழு ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அக்கறை காட்டாத நிலையில் பல்வேறு பாதிப்புகளில் இருந்து உடல்நலம் காக்க, 'பிளாக்' வாரியாக சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு பெண், ஆண் டாக்டர்கள், நர்ஸ், மருந்தாளுநர், ரத்த பரிசோதகர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்வது?

     அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை எடுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம். 


கோவையில் குடிபோதையில் ரகளை செய்த பிளஸ்–2 மாணவி

           கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய் பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திய போது செல்போனில் செக்ஸ் படம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிளஸ் 2வில் அதிக மார்க் அள்ள சிறப்பு புத்தகம்

           அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களின், கேள்வி - பதில் அடங்கிய, 'பயிற்சி பெட்டகம்' என்ற, சிறப்புப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியே பயிற்சி பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வல்லுனர் மற்றும் ஆசிரியர் குழுக்கள் இணைந்து, பல ஆண்டுகளின் கேள்வித் தாள் மற்றும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ரேங்க்; ஒரே பென்ஷன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

         ராணுவ அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர், லக்னோ நகரில் நிருபர்களை சந்தித்த போது, ''ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, 'ஒரு ரேங்க்; ஒரே மாதிரியான பென்ஷன்' விவகாரத்தில், விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும். ராணுவம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால், அதை நானாக அறிவித்து விடுவேன்,'' என்றார் சூசகமாக. அவர் கூறியதன் படி, ஒரு ரேங்க்; ஒரே பென்ஷன் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிடுவார் என்பது தெரிய வருகிறது.

குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு 9-ந்தேதி கடைசி நாள்

        74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.

வங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்

         வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.
 

குரூப் 4 தட்டச்சர் பணி: ஜூலை13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

       குரூப் 4 தொகுதியில் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 13-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா?

          வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.
 

'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை: தேர்வு அறிவிப்பால் அதிர்ச்சி

        பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம் பெற்றதால், அப்பகுதி நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. 
 

பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்கு குழு

           அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குழந்தைகள் நலக்குழு ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்துகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அக்கறை காட்டாத நிலையில் பல்வேறு பாதிப்புகளில் இருந்து உடல்நலம் காக்க, 'பிளாக்' வாரியாக சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு பெண், ஆண் டாக்டர்கள், நர்ஸ், மருந்தாளுநர், ரத்த பரிசோதகர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

      'ஆராய்ச்சி படிப்புகளில், விதிகளை மீறி செயல்படக்கூடாது' என, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு, வழிகாட்டி பேராசிரியரை நியமித்த பின், அவர் மூலமாகவே, மாணவர் ஆராய்ச்சி செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பட்டம் பெற முடியும். 

அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்கள் !

          ஆங்கில மோகத்தால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையும் வேளையில் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்கள். மற்றும் சிறப்பான கற்றல் மூலம் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு உழைத்த ஆசிரியர்களை வாழ்த்துங்கள்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive