Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்

            சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான மாதாந்திர உதவி பெறுவதற்காக, விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது. வருமான வரம்பு, 5,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன் பெறலாம். வாரிசுகள் இருந்தாலும், ஆதரவில்லை என்றால், தாராளமாக முதியோர் உதவி கிடைக்கும்.
உதவித்தொகை:

ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்

         ஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்ததாக புகார் அளித்தால், குறிப்பிட்ட வங்கி அபராதத்துடன் தொகையை திரும்ப வழங்கும்.


நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள் வட்டாரங்கள் அளவில் மாற்றப்பட்டு மதிப்பீடு: புதிய திட்டம் நிறுத்தம்!

            நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு

        சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவு; போலியை ஒழிக்க நடவடிக்கை

          ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள் வழங்கல்துறை எச்சரித்துள்ளது.

அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்

       முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

     மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. 

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

           தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்

                பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார். காலவரைமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக குறைந்தபட்சம், 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது. சங்க நிர்வாகிகள், நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதியை சந்தித்து பேசினர்.

10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்

            பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதால், எந்த விடை எழுதி இருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்படுத்தபடாமல் முடங்கிய பிரத்யேக இணையதள வடிவமைப்பு திட்டம்

           அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத பள்ளிகள் குறித்து அடையாளம் காண்பிக்கும் நோக்கில், 2011ல் பிரத்யேகமாக துவக்கப்பட்ட இணையதளம் வடிவமைப்பு திட்டம், செயல்படுத்தபடாமல் முடங்கியுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலை பிரிவுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை - மாணவர் எதிர்காலம்?

       தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலை பாடப்பிரிவுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பாழாகிறது ஏழை கல்லூரி மாணவர்களுக்கான வெளிநாட்டுக் கல்வி: பேராசிரியர்கள் கவலை

              ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு, அரசுக் கல்லுாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது; இதனால், ஏழை மாணவர்களின் வெளிநாட்டு கல்விக் கனவு பாழாகிவருவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு

சிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர்  தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மற்ற வழக்குகள் விசாரிக்க இருப்பதாலும், அறிக்கைகளை முழுக்க படிக்க இருப்பதாலும்,நீதிமன்ற விடுமுறைக்கு பின்னர்  இவ்வழக்குகள் வரும் ஜூலை 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன....

By
P.Rajalingam Puliangudi

மே 1ம் தேதி முதல் பிஎஸ்என்எல் புதிய சலுகை

               சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 

தத்ததெடுப்பு விடுப்பு

          ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையை சட்டபூர்வமாகத் தத்து எடுத்துக்கொள்ளும் பெண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் வரை சிறப்பு தத்ததெடுப்பு விடுப்பாகவும், ஆண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தந்தையர் விடுப்பாகவும் அனுமதிக்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: 6 ஆண்டாக நியமனத்தில் சிக்கல்: தேர்ச்சி பெற்றவர்கள் தவிப்பு

          தமிழகத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆறு ஆண்டுகளாக பணியில் சேர முடியாமல் தேர்வு எழுதியவர்கள் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் கூட்டமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

      ஊதிய உயர்வுக்காகப் போராடி வரும் ஆசிரியர்களின் கூட்டமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 

76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு

         தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் முடிவு செய்துள்ளனர்.

செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்

            ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டிய வை

           ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2.     தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2.                      அசையும் சொத்து -----------------------------(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட  அதிகாரிக்கு  (controling officer ) ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .              
 

9ம் வகுப்பில் இனி `ஆல்பாஸ்’ கிடையாது

             ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
 

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ஏற்பாடு

         தேர்வு முடிவு வெளியிடப்படும் காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பிளஸ் 2,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது.

1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்

            "தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ்

            தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற போராட்டம், நேற்று இரவு, வாபஸ் பெறப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 15ம் தேதி முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.
 

30க்குள் முடிக்க திட்டம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

              பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று  தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது.
 

புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை

           'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் புதிய பிஎட் கல்லூரிகள் தொடங்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

              தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக பிஎட் கல்லூரிகள் இருப்பதால், இனி புது கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். மேலும், அவசியம் மற்றும் தேவை இருந்தால் மட்டுமே புதுக் கல்லூரிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படும் என்று ஆசிரியர் கல்விக் குழு தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்  பல்கலைக்கழகம் சார்பில், 
 

வரும் கல்வி ஆண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு

          பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

                  ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு நாளை 21,04.2015 அன்று கோர்ட்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

வசூல் வேட்டை: மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு: காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு.

அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும்
அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.

10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

           பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) முதல் தொடங்கப்பட உள்ளது.
 

ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்

               ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?

              'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive