Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு

     பொதுமக்களின் தங்க தாகத்திற்கு தடை போட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, தங்க பத்திரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து, முதிர்ச்சியின் போது, தங்கத்திற்கு ஈடாக பணம் பெற வசதி செய்யப்பட உள்ளது.


வேளாண் பல்கலை., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

    தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, ௨௦௧௫ - ௧௬ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்.சி.,(விவசாயம்) உள்ளிட்ட, 13வகையான பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மே, 15ம் தேதி முதல், இம்மாதம், 13ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.


'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்பினால் தண்டனை? 'பேஸ்புக்' நிறுவனத்தை நாடியது தமிழக சைபர் கிரைம்

     அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


BE - 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்

   இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்

கல்வி உதவித்தொகை நிலுவைதிணறும் இன்ஜி., கல்லூரிகள்

       இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்க தாமதம் ஆவதால், தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன.தமிழகம் முழுவதும் 573 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியிலும் 30 சதவீதம் என்ற அளவில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


வாட்ஸ் அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான உடற்கல்வி ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

     ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 18–ந் தேதி காலை நடந்த கணிதத்தேர்வின் போது தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தங்களது மொபைல் போன் மூலம் கணித வினாத்தாளை புகைப்படம் எடுத்து அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பினர்.


தியானம் என்னவெல்லாம் செய்யும்? - ஆராய்ச்சிகள் கூறும் உண்மை


  
  தியானம் ஆன்மிக வளர்ச்சிக்கு மிக சக்திவாய்ந்த ஒரு கருவி. உடல் மன கட்டுப்பாடுகளிலிருந்து ஒருவரை விடுவிக்கும் கருவியாகவும் இது இருக்கும். உள்நிலை அறிவியலை பயில்பவர்கள், அதனைச் சொல்லித் தருபவர்கள் பல்வேறு உடல், மன சம்பந்தமான பலன்களை அடைவதாகச் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் பெருகி வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

  சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

  இரண்டு முறை குருப் 2 தேர்ச்சி பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த பதிவை இடுகிறேன் .
 
1.முதலில் ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் .டி.என் .பி.எஸ் .சி தேர்வுக்கு 3 மாதம் படிப்பது,வங்கி தேர்வுக்கு மூன்று மாதம் படிப்பது ,பின் SSC க்கு படிப்பது இவற்றை தவிருங்கள் .ஏனெனில் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அணுகு முறையை கொண்டது .ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் போக்கு வேண்டாம் .அது வெற்றி காலத்தை அதிகப்படுத்தும் .வயதும் வீணாகும் .
 

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம் : சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்

       டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும் ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 

பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

       பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2015-16 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பின்னர் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 29-இல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது


பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'

     பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.
 

பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

     பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.


குரூப் - 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 தேர்வு எழுத 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு:ஜூலை 26ல் குரூப் - 2 நேர்முகத் தேர்வுக்குட்பட்ட பதவிக்கான 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
 

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

    சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

     சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? - எதிர்பார்ப்பு

      2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு-தினகரன்வெளியீடு

 

பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள்

      விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. 
 

ஆன்-லைன் முறையில் சம்பளம் விரைந்து பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.

       ஆன்-லைன்' முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், உடனடியாக விடுபட்டுள்ள ஆசிரியர்களின் விபரங்களை பதிவு செய்ய தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழக அரசுக்கு உத்தரவு

      தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் 2 மாதங்களில் நிரப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?- ஆன்லைனில் தெரிந்துகொள்ள வசதி!


     குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

     தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவக் கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

    மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை நடத்தினாலும், மாணவர்களுக்கு அனுமதி கடிதம் தர வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

         தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  

AIPMT-2015 நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 12-ல் வெளியிடுவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு

    அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர சிபிஎஸ்இ AIPMT-2015 நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அந்த வகையில், இந்தாண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் முடிவுகள்  வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி

      அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

        தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளத
 

பெண் அதிகாரி டார்ச்சர் ஆசிரியை தற்கொலை முயற்சி


        கோவை மாவட்டம் அன்னூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பு குழந்தைகளுக்கான வளமையம், அன்னூர் தெற்கு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயின்று வருகின்றனர். 4 ஆசிரியர்கள், 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மையத்தின் மேற்பார்வையாளராக சுப்புலட்சுமி பணியாற்றி வருகிறார்.  பணியில் முறைகேடாக நடப்பதாக கூறி சுப்புலட்சுமி மீது மாவட்ட நிர்வாகத்துக்கு அண்மையில் புகார் அனுப்பப்பட்டது. 

போதை டிரைவரால் வேன் கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் 25 பேர் காயம்

         நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பிநகரில்  தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது.  நேற்று மாலை பள்ளி முடிந்து சிங்கிகுளம் மற்றும் மலையடி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 குழந்தைகள்  தனியாருக்கு சொந்தமான வேனில்  வீட்டுக்கு புறப்பட்டனர். வேனை  பாணான்குளத்தைச் சேர்ந்த டிரைவர் சிவா(29) ஓட்டினார்.  வேன் நாங்குநேரி டோல்கேட்டை ஒட்டியுள்ள வரமங்கைபுரம் ரோட்டில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த குழந்தைகள் அலறினர். 

பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை

     தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

சாம்சங் மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? : உஷார்....வருது ஆபத்து

        சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்கள், 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில், குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால், அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம்.
 

குழந்தை ஜனனம் ஆன கிழமைக்கான பலாபலன்கள்

ஞாயிற்றுக் கிழமை
ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, செல்வச் செழிப்பு/விருத்தியுடன், செல்வாக்கு விருத்தியும் பெறுவர். மேலும் அவர் தமது நடுப்பகுதி வாழ்க்கை, மத்திய வயதில் (40-45வயதிற்கு மேல்)மிகுந்த பேரும் புகழுடன் சந்தோஷகரமான வாழ்க்கை அடையப் பெற்றிருப்பர்.

மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

       நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை

       அடுத்த மாதம் 1-ம் தேதியில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive