Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு முடிவால் வருத்தம்: ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு ‘104’ சேவை மூலம் ஆலோசனை

         பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது, மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று ‘104’ சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றனர். 

சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

     ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

பிளஸ்–2 தேர்வு முடிவு: மனஅழுத்தத்தால் தவித்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

          தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் அருமருந்தாக 104 உதவி மையம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் கீழ் இயங்கி வரும் இந்த உதவி மையம் பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இந்த மையம், தேர்வு நேரத்தில் முழுக்க முழுக்க மாணவர்களின் மனதில் இருக்கும் வலியை போக்குவதற்கு பயன்படுகிறது.
 

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம்

         இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பி.இ. விண்ணப்பம்: இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? எங்கே பெறலாம்?

         பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 

மே 19 முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

        தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள். 
 

பாஸ்வேர்டை மறந்தாலும் கவலையில்லை: வலைத்தளங்களை பயன்படுத்த உதவும் புதிய சாப்ட்வேர் வருகிறது

     பேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) மறக்காமல் இருப்பது மிக கடினமான செயல்களில் ஒன்று. இந்த கஷ்டத்தை போக்கும்விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கடவுச்சொல்லுக்குப் பதிலாக கேள்வி-பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

    10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு 0.5 சதவீதம்குறைகிறது

          பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்'  அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்கிறது அரசு பள்ளிகளின் வீழ்ச்சி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது.

       தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது. 
 

அதிர்ச்சி தரும் வட மாவட்டங்கள்


பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் வட மாவட்டங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, அரியலுார் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட குறைந்தே உள்ளது. மாநில 'ரேங்க்' பெறுவதிலும் தேர்ச்சி சதவீதத்திலும் மற்ற மாவட்டங்களை இந்த ஆண்டாவது பின்னுக்குத் தள்ளும் என்ற எதிர்பார்ப்பு வழக்கம் போல் பொய்த்துப் போனது. மற்ற மாவட்டங்கள் 90 சதவீதத்தை எட்டிய நிலையில், இம்மாவட்டங்கள் இன்னும் 80 சதவீதத்தை தக்க வைக்கவே போராடும் நிலை உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி

      இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. மாநில, மாவட்ட இடங்களைப் பிடிக்காவிட்டாலும் 90 சதவீத தேர்ச்சி கூட பெற முடியாமல் அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் இடம் திரைப்பட பாடகி சுருதி சாதனை ‘தினத்தந்தி’ வினா-விடை உதவியாக இருந்ததாக பேட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் திரைப்பட பின்னணி பாடகி சுருதி 1,172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை

         தந்தையை இழந்தாலும் துவண்டுவிடாமல் படித்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

கைதிகளின் தேர்ச்சி விகிதம் 98.5%

         சிறையில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய 65 கைதிகளில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கணித பாடத்தில் 1728 மாணவ – மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண்

      நாமக்கல் மாவட்டத்தில் 31020 மாணவ –மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள். இதில் 29 ஆயிரத்து 702 மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.75 ஆகும்.

செய்முறையில் 50: எழுத்துத்தேர்வில் 0

         விருதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவி ஒருவரது மதிப்பெண்ணில் இயற்பியல் செய்முறைத்தேர்வில் 50 மதிப்பெண், எழுத்துத்தேர்வில் 'ஜீரோ'மதிப்பெண் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. 
 

திருமணம் ஆகியிருந்தாலும் மரணம் அடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு வேலை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

          திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?

         +2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்? சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.

பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!

           இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின. 
 

மொழிப்பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்

அராபிக் மொழிப் பாடம்
ஜே.எம் அஹமத் நிஷாத் - 194 - 1056 ( முதலிடம் )
எம்.ஏ மொகமத் பார்திமா - 194 -1053 ( இரண்டாம்)
பாளையம் நபீஷாத் அமீனா 194- 1049 (மூன்றாம் இடம்)

அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - மாநிலத்தில் 2 வது மாவட்டமாக தேர்ச்சி பெற்று அசத்தல்

"நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்!"

      அன்று  பெரம்பலூர் கலெக்டர் அவர்களால்  போட்ட விதை இன்று மாநில அளவில் 2 ம் இடம் பிடித்து முன்னோடி மாவட்டமாக அசதி இருக்கிறது

83 குரூப்-1 அதிகாரிகள் தேர்வு குறித்த வழக்கில் யு.பி.எஸ்.சி. அறிக்கை தாக்கல் விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

          டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 அதிகாரிகளின் நியமனம்  செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் யு.பி.எஸ்.சி. சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.

பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.

FLASH NEWS : STATE FIRST MARK 1192


திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா தமிழை முதல் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதலிடம்
பிளஸ் -2 ரிசல்ட் தமிழகத்தில் 90.6% தேர்ச்சி
மாணவர்கள் 87.7 சதவீதம்
மாணவிகள் 93.4 % : மாணவர்கள் 87.6 % தேர்ச்சி
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

        தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.


பிளஸ் 2 தேர்வு: இந்தாண்டும் மாணவிகளே முதலிடம்

       தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
 

பிளஸ் 2: நான்கு மாணவர்கள் இரண்டாம் இடம் - 1190


தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1190 மதிப்பெண்களை பெற்று4 பேர் பிரணேஸ் பிரவீண் சரண்ராம். வித்தியவர்சினி ஆகிய நான்கு மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம். தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

ப்ளஸ்2 தேர்வு முடிவு வெளியாவதால் பெற்றோரே உஷார்: தற்கொலை, மாயமாவதை தடுக்க போலீசார் எச்சரிக்கை

     தமிழகத்தில், ப்ளஸ் 2 தேர்வு முடிவு, இன்று வெளியாகும் நிலையில், மாணவ, மாணவியர் தற்கொலை செய்வது, மாயமாவதை தடுக்க, பெற்றோரை, போலீசார் உஷார் படுத்தி உள்ளனர். மாணவ, மாணவியர் மாயமானால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive