Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர: ரம்யா சரஸ்வதி

Photo: அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர
 : ரம்யா சரஸ்வதி
முன்னுரை 

கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும் கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம் பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம் யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும் இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு (அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்….. 

பள்ளிகளின் பிரிவினைக்கான காரணம் 

முதல் காரணம் 

அன்றைய காலத்தில் பள்ளிகூடம் என்பது ஒரே மாதிரியான முறையில் தான் இருந்தது….அதாவது ஆசானின் வீட்டிற்கோ அல்லது ஒரு பொதுவான இடத்திலோ அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறை பேதமின்றி வழங்கப்பட்டது….ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பின் தான் கல்வி முறையில் மாற்றம் நிகழத்தொடங்கியது….அதன் பிறகு தான் நம் மக்களுக்கும் ஆங்கிலத்தின் மீது மோகம் ஏற்பட்டது…அதை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆட்சியை நம்மில் நிலை நாட்ட அவர்கள் எடுத்த ஒரு கருவி தான் அவர்கள் மொழி…..இது ஒரு பெரிய காரணமாக தெரியாவிட்டாலும் இது ஒரு ஆழமான , யாராலும் இன்று புரிந்துக்கொள்ள முடியாத, புரிந்தாலும் அதில் இருந்து மீளமுடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது நிதர்சன உண்மை….இதற்கும் பள்ளிகளின் பிரிவினைக்கும் என்ன காரணம் என்னவென்று உங்களுக்கு தோன்றலாம்….ஆனால் இந்த “ ஆங்கிலமொழி “ தான் மிகப்பெரிய ஆனித்தரமான ஒரு காரணம் நம் இன்றைய அரசுப்பள்ளியின் குறைந்த வளர்ச்சி நிலைமைக்கு….ஆங்கிலம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான் நான் ஒத்துக்கொள்கின்றேன்….ஆனால் அதை கடவுளாக நினைக்கும் அளவிற்க்கு நம் மக்கள் எப்படி தள்ளப்பட்டனர்…வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் , வணிகமும் ஒரு காரணம் எனக்கூறலாம்….அன்று அம்மா என்று பிள்ளைகள் அழைத்தால் பூரிப்பில் அன்னை கட்டி தழுவிய காலம் போய் மம்மி டாடி என்று சொல்லவில்லை என்று பிள்ளைகளை குறை கூறும் அளவிற்க்கு காலம் சென்றுவிட்டது…. 

இரண்டாம் காரணம் 

தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் பாடமுறைகளும் அரசுப்பள்ளியில் நடத்தப்படும் பாடமுறைகளும் ஒப்பிடுகையில் நம் மனம் நம்மை அறியாமலே தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுக்க துடிக்கின்றது….காரணம் அங்கு பிள்ளைகளுக்கு வெறும் புத்தங்கள் வாசித்துக் காட்டப்படவில்லை…..அதை செயல் முறைகளிலும் செய்து எளிதில் பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் கற்பிக்கப்படுகின்றது….அங்கு உள்ள மாணவர்களுக்கு தனி இருக்கை முதல் எல்லாமே தனித்துவமாக இருப்பதால் எல்லோருக்கும் கற்கும் வாய்ப்புக்கிடைக்கின்றது….அதனால் அவர்களது ஆர்வமும் தூண்டப்படுகின்றது…. தனியார் முறை கல்வியில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது… 

ஆனால் இன்றும் சில அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் ஆசானுக்காக வருடம் முழுக்க காத்திருக்கும் நிலை உள்ளது…..இங்கு வெறும் புத்தகங்கள் வாசிப்பிலே காலங்கள் நகர்கின்றன……செயல்முறை விளக்கம் பற்றி அங்கு உள்ள மாணவர்கள் அறியவில்லை என்று கூறவே மனம் வேதனை அடைகின்றது….இங்கு தனித்துவம் இல்லை….ஒருப் பொருளை பலப் பேர் பங்கிட்டு கற்கவேண்டியுள்ளது…… இதனால் இங்கு பயிலும் மாணவர்களின் சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை….அதற்கு உதாரணமாக 

உதாரணம் 

தண்ணீரின் அறிவியல் குறியீடு (H2O) என்று சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நீராவியின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்கப்படும் பொழுது, மாணவர்கள் கேள்வி கேட்ட ஆசிரியரை கோபித்து கொள்ள கூடும். காரணம், தண்ணீருக்கு சொல்லிக் கொடுத்தார்களே அன்றி நீராவிக்கு என்ன குறியீடு வரும் என்பதை சொல்லித் தரவில்லையென்பார்கள். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல் தர்க்கரீதியாக (logical) சிந்திக்கும் திறமை நமது கல்விமுறையில் இல்லை என்பதே நமது வருத்தம். (நீராவி தண்ணீரிலிருந்து ஆவியாவது என்பதனால் அதற்கும் H2O) தான்). 

பிழை யார் மீது 

நாம் மேலே இரண்டு காரணங்களை பார்த்தோம்….இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் பிழை யாருடையது….பெற்றோர்களா????? நிச்சயம் இல்லை….. தன் பிள்ளைகளின் சிந்தனைகள் தூண்டப்பட்டு நல்ல முறையில் கற்கவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்….அதனால் தான் இரவும் , பகலும் பாராது தன் பிள்ளைகளின் கல்விக்காக ஒடாய் தேய்கின்றனர்….பிற்காலத்தில் அவர்களாவது தன்னைப்போல் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் தான் தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர்…..உண்மையில் பிழை நம் அரசுக்கல்வி முறையில் உள்ளது….தனியார் பள்ளிகளைப்போல் அரசுப்பள்ளியிலும் பாடம் கற்பிக்கப்பட்டால் நம் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை தேர்வு செய்ய போகின்றனர்???? ஏன் கல்வி அமைச்சராய் இருப்பவரின் பிள்ளைகள் கூட அரசுப்பள்ளியில் பயிலவில்லை என்பது நிசர்சன உண்மை… காரணம் அரசுப்பள்ளியின் கல்விதரம் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும்…அதை சரி செய்யவேண்டியவர்கள் எல்லாம் மெளனம் காப்பது ஏனோ விளங்கவில்லை…..பணம் திண்ணி முதலைகளுக்கு அரசுப்பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு குட்டி ஐன்ஸ்டீனையும்,ஒவ்வொரு கல்பனா சாவ்லாவையும் பற்றிக் கவலைப்பட நேரம் இல்லைப் போலும் இந்த அரசியல் என்னும் போலிச் சாக்கடையில்….. 

அரசுப்பள்ளியின் தரம் உயர்த்த 

• முதலில் செயல்முறை விளக்கத்துடன் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும்….. 
• மாணவர்களின் திறன்களை வளர்க்க அரசு ஒவ்வொருக்குழந்தையின் திறமையை ஆராய்ந்து அவர்களை ஊக்குவிக்கும் முறையில் பண உதவி அதிக அளவில் செய்யவேண்டும்…. 
• பாடங்களுடன் மட்டும் இல்லாமல் பிற நாட்டு மொழிகளும் அவர்களின் கலாச்சாரங்களும் கற்பிக்கபட வேண்டும்…. 
• ஒவ்வொரு வகுப்பறைகளும் வெறும் புத்தகங்களும் மேஜைகளும் நிரம்பிய இடமாக இல்லாமல் மாணவர்களின் கற்பனைத்திறனை தூண்டும் விதமாக புத்தக தகவல்களை வண்ண ஒவியங்களாக சுவற்றிலும் செயல்முறைகளில் அவர்களே செய்து புரிந்துக்கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனியாக இருக்கவேண்டும்… 
• நம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் நம் கலாச்சாரங்கள் பற்றியும் கதைகளாகவும் முடிந்தால் அவைகளை படங்களாக போட்டுக் காண்பித்தால் நன்கு பதியும்… 
• கரும்பலகை கல்வியாக மட்டும் இல்லாமல் சற்று தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி வடிவிலான முறைகளைப் பின் பற்ற வேண்டும்…. 
• மாணவர்களுக்கு மனம் ரீதியான பிரச்சனை இருக்கிறதா என்று அவ்வபோது ஆய்வு கொள்ளவேண்டும்… 
• புத்தகங்களில் படிக்கும் தகவலை நேரடியாக பல இடங்களுக்கு கூட்டிச்சென்று காண்பிக்கவேண்டும்….அதில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை அவர்களிடம் கேட்டு ஆய்வு செய்யவேண்டும்… 
• படிப்போடு இல்லாமல் விளையாட்டுகளிலும் மாணவர்களை நன்கு ஊக்குவிக்க வேண்டும்… 
• அரசு ஆசிரியர்களுக்கு தனியார் ஆசிரியர்களுக்கு நிகராக அவ்வபோது பயிற்சி அளிக்கப்பட வேண்டும் காலத்தின் மாற்றத்திற்க்கு ஏற்ப….. 

இவைகளை எல்லாம் நிச்சயம் நடைமுறைப்படுத்தினால் அரசுப்பள்ளியில் தரம் உயர்வது மட்டும் இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்…..அதன் பிறகு தனியார் பள்ளியின் முக்கியத்துவம் குறையும்…….பெற்றோர்களும் தங்கள் பணத்தை விரயம் செய்யமாட்டார்கள் …….. 

முடிவுரை 

மேற்சொன்ன முறைகளை அரசு மேற்கொண்டால் நிச்சயம் இன்றைய நிலை மாறுவது மட்டும் இல்லாமல் இன்றைய குழந்தைகளுக்கு பணச்சந்தைகளாக தெரியும் பள்ளிக்கூடங்கள் நாளை கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கோவிலாக தெரியும்…..கல்வி என்பது பொருள் ஈட்ட மட்டுமே என்ற எண்ணாம் போய் அறிவை வளர்கத்தான் என்பதை புரிந்துக்கொள்வார்கள் நம் வருங்கால தலைமுறையினர்……அதற்கான நாட்களின் ஆவலோடு நான் காத்திருக்கின்றேன்….இப்படி ஒரு நல்ல தலைப்பில் கட்டுரை எழுத வாய்ப்பு தந்த அகன் ஐயாவிற்க்கு நன்றி…முன்னுரை 
 
         கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும் கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம் பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம் யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும் இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு (அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்….. 

ஒடுக்கத்தூர் அருகே பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

      ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 220 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 7 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 3 வாரங்களாக 2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தினர். இதனால் பருவத்தேர்வுக்கான பாடங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை.

அரசுப்பள்ளிகளின் அவலம் நீங்குவது எப்போது? பிஞ்சுகள் மனதில் நஞ்சு விதைத்தல் தகுமோ!

Photo: அரசுப்பள்ளிகளின் அவலம் நீங்குவது எப்போது ?பிஞ்சுகள் மனதில் நஞ்சு விதைத்தல் தகுமோ 
http://www.dinamalar.com/news_detail.asp?id=1016380
https://www.facebook.com/pups.cmutlur?fref=ts

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவையே. இன்றைய குழந்தைகளை நாளைய சாதனையாளர்களாக மாற்றக்கூடிய கல்விச் செல்வத்தை பெறுவதில், அவர்கள் பல்வேறு சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது மட்டுமின்றி, பாதுகாப்பு வசதிகளுமின்றி உள்ளது.

இதனால், ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை கல்வியறிவை பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில், கிராமந்தோறும் துவக்கப்பள்ளிகள் கட்டப்பட்டும், அதனால், மாணவர்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை. அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், கல்வி கற்கும் பாடசாலைகளை கவனிக்காமல் விடுவதால், விருப்பத்தோடு வரவேண்டிய பள்ளிக்கு, மாணவர்கள் வெறுப்புடன் வரவேண்டிய நிலை உருவாகியுள்ளது.பள்ளியின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. இன்று பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால், அரசுப்பள்ளிகள் அப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள 'குடிமகன்'களின் புகலிடமாக மாறியுள்ளது. 

பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெருமை கொண்ட காலம் மாறி, தற்போது அச்ச உணர்வுடனே அனுப்புகின்றனர். குடிநீர், கழிப்பறை, தரமான வகுப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்டவையே பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள். அவற்றில் ஒன்றிருந்தால் மற்றொன்று பிரச்னையாக உள்ளது. ஏராளமான கிராமப்புறங்களில் இவை அனைத்துமே மோசமான நிலையில் இருக்கும் பள்ளிகளும் உண்டு. கல்வித்தரத்தை குறித்து மட்டுமே முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளின் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை.
வகுப்பறைகளில் சுவர் இடிந்து விழுவது, குடிநீர் வசதியில்லாமல் மாணவர்கள் அவதிப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டுமே, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளப்போகிறோம் என்ற ஆர்வத்துடன் பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளுக்கு, பள்ளி வளாகத்தில் 'குடிமகன்'கள் விட்டுச்சென்ற பாட்டில்களை சுத்தம் செய்வதே முதற்கடமையாக உள்ளது.

இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் குடிநீர் தொட்டிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமலும், சிதிலமடைந்த நிலையிலும் இருப்பதால், குழந்தைகள் அதன் அருகில் செல்லவே பயப்படுகின்றனர். திறமையான மாணவர்கள், சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருந்தும் அரசு பள்ளிகளின் மோசமான கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பின்மை போன்றவற்றால் பெற்றோர் அரசுப்பள்ளிகளை புறக்கணிக்கின்றனர்.கல்வித்தரம், மாணவர் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யும் கல்வித்துறை பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை குறித்தும் ஆய்வு செய்து தகுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கல்வித்தரம் முழுமையாக உயரும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பில்லாத பள்ளிகளுக்கு மனதில் அச்சத்துடனேயே அனுப்ப வேண்டியுள்ளது. ஏழை எளிய மக்கள் அரசுப்பள்ளிகளை நாடியே உள்ளனர். இதனால் பிற பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கவும் முடியாமல், அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும் கல்வி கற்றால் போதும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு அனுப்புகிறோம். படிப்பதற்கான நோட்டுப்புத்தகங்கள், சீருடை வழங்குவதால் மட்டுமே குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்காது. படிக்கும் இடத்தில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும் பட்சத்தில் படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். கல்வித்துறை அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர் கருத்தாக உள்ளது.   அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவையே. இன்றைய குழந்தைகளை

ரயில்வே பல்கலைக் கழகம் அறிவிப்பு

        ரயில்வே துறையின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா கல்வியை தரும் வகையிலான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முடியுமா?

       வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.

         வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
 
          டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
 

பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு.

         சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிவது தொடர்கிறது. இதையடுத்து, பள்ளிக் கட்டிடங்களின் உறுதியை ஆய்வு செய்யவும், ஆபத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை நாளை மறுதினம் கூடுகிறது.


           தமிழக மீனவர்கள் கைது, மவுலிவாக்கம் கட்டிட விபத்து மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்நாளை மறுத னம் கூடுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 12 வரை நடக்கிறது.

சட்டசபை கூட்டத்தொடர்:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 12 வரை நடக்கிறது.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்.

தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரயில்களில் தமிழகத்திற்கு 5 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

JA காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு.

      பள்ளிக்கல்வித்துறை :3.7.2014 நிலவரப்படி 1395 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது -இணை இயக்குநர்

முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

      அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம்நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,

ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:

                விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம், செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர் ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன:

          தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில் தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
 

107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

           அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

"தாட்கோ" மூலம் 7,50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது

       "தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்

மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு

         மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

'கண்ணீர்' விட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி :


       தொடக்கக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'மனமொத்த பணிமாறுதல்' உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.
 

இம்மாதம் இறுதியில் வண்ண அடையாள அட்டை வினியோகம் .....

           தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு,சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். 
 

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்

             பத்தாம் வகுப்பு மறுகூட்டலில், 450 பேருக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவிற்குப் பின், 15 ஆயிரம் மாணவர்கள், பல்வேறு பாடங்களில், மறுகூட்டல் கேட்டு, தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்தனர்.
 

BE - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள்

        பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம் - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள்.

முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

          அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது வழக்கம்.

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 
 

அரசு யார் பக்கம்?


பணக்காரக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக் கூடாதா?

         கட்டாய இலவசக் கல்வித் திட்டம் அமலானவுடனேயே சென்னை நகரத்திலிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் இப்படிச் சுற்றறிக்கை அனுப்பினாராம்: “இனி உங்கள் பிள்ளைகள் உங்களது வேலைக்காரர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்துதான் உட்கார வேண்டும். 

பல்கலைக்கழக மானியக் குழு!

         பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானது.

பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம்!

சென்னை:
        சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!

     பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை



           தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது. 

கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

         பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
 

கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

                தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

            பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு

           தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.



பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

               பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்...

தமிழக அரசுக்கு நோட்டீஸ்:
 
         உச்சநீதிமன்றம் ரத்துசெய்த குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive