Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு :'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலியாக, 20 ஆண்டுகளுக்குப் பின், முறையாக
வினாத்தாள் தயாரித்து, ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, உடற்கல்விப்
பாடத்துக்கான தேர்வு துவங்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில், வாரத்திற்கு இரு நாட்களாவது, உடற்கல்வி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், சமச்சீர் கல்வி அறிமுகமான
போது, ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடும், சி.சி.இ.,
முறை அமலானது.
தவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில்
எம்.பி.பி.எஸ். இடத்தை தவறுதலாக ஒப்படைத்த மாணவிக்கு அதே கல்லூரியில்
சேர்க்கை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்
தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான,
89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு
நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.
முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்
அரசு நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை
நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத் தமிழாசிரியர் கழகம்
வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு,
மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக்
கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட
காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன.
அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்
பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்
உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள
பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,”என சிவகங்கையில் உயர், மேல்நிலை
பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.அவர்
கூறியதாவது:
பள்ளிகளை மூடி போராட்டம்:பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு
“பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, அக்டோபர், 8ல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி
போராட்டம் நடத்தப்படும்,” என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.
மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான
கவுன்சிலிங் நிறைவடைந்தது; 1,200 இடங்கள் காலியாக உள்ளன.பி.எஸ்சி.,
நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப்
படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள்
உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின.
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி
பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தாய்சேய் நல அதிகாரிகள் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
சென்னை, மதுரை,
கோவை ஆகிய நகரங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்தது. சென்னையில்
எழும்பூர் அரசு மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 21 இடங்களில் தேர்வு
நடந்தது.தேர்வு மையத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.
10th Quarterly Exam Answer Key - Maths
Science (23.9.10) (**New**)
Maths (21.9.10) (**New**)- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Udhayakumar - Click Here (Typed Copy)
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Nagarajan - Click Here (Tamil Medium] (Typed Copy)
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Nagarajan - Click Here (English Medium]
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Nagarajan - Click Here
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. A.K.Rajadurai- Click Here
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Ravichandiran- Click Here
English Paper 2 - (18.9.10)
English Paper 2 | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Ms. J.Devika - Click Here
English Paper 2 | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. I.Chinnapparaj - Click Here
English Paper 1 (16.9.10)
10th Quarterly Exam Key Answer | Maths
Maths (21.9.10) (**New**)
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. S.Nagarajan - Click Here (Now Availabe)[Updated Time: 1.00 PM]
- Maths | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. A.K.Rajadurai- Click Here (Now Availabe)[Updated Time: 7.00 PM]
English Paper 2 - (18.9.10) (**New**)
English Paper 2 | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Ms. J.Devika - Click Here
English Paper 2 | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. I.Chinnapparaj - Click Here
English Paper 1 (16.9.10)
பி.எட். கட் ஆப் வெளியீடு: கலந்தாய்வு 28-ல் தொடக்கம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?
வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:
7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு - இந்த முடிவுக்கு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
7th Central Pay Commission – Regularisation of Retirement Age?
(completing 33 years of service or at the age of 60, whichever comes first)
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று
நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி
தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மகப்பேறு மற்றும் குழந்தை நல
சுகாதார அலுவலர் பதவியில் 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை
கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி
பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல்,
தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான்
பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப்
போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார்
பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
12th Quarterly Exam Key Answer
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. P.Ilayaraja - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. G.Gobu - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - Tamil Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. E. Rajesh Kumar - Tamil Medium Key
10th Maths Quarterly Exam Model Question
- Maths Quarterly Exam Model Question Paper 1 (2015-16) | Mr. P.Thirukumaresa Kani - English Medium
- Maths Quarterly Exam Model Question Paper 1 (2015-16) | Mr. P.Thirukumaresa Kani - Tamil Medium
தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே
தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின்
ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது.
தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்
தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு
விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம்
வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு இணையான
விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது
இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும்.
சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி
நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை
உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித்
தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு
அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில்
எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது
பார்க்கலாம்.