
2023-2024
ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
அறிவிக்கை எண் .01 / 2024 , நாள் 09.02.2024 - ன்படி 21.07.2024 அன்று
ஒளியியல் குறி அங்கீகாரம் ( Optical Mark Recognition ( OMR ) மூலம் தேர்வு
நடத்தப்பட்டது . இத்தேர்வில் 25,319 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
மாண்பமை
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் : WMP No.16353 of 2024 and batch cases
தீர்ப்பாணை நாள் : 18.03.2025 ற்கிணங்க , மேற்காணும் போட்டித் தேர்வில் ,
Part . B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட " A " வகை வினாத்தாளுக்குரிய
கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Answer Key )
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in- ல் 28. 03. 2025 அன்று Objection Tracker வெளியிடப்பட்டது.
உடன்
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.03.2025 முதல் 03.04.2025 பிற்பகல் 5.00
மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை ( Objections )
தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில்
பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு
முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப்பின்
பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின்
அடிப்படையில் Part . B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய
தேர்வர்களது OMR விடைத்தாளினை கணினிமயமாக்கப்பட்ட மின்னணு செயல்முறை (
Computerised electronics process ) மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள்
கணக்கிடப்பட்டன.
தற்பொழுது இத்தேர்வில் , Part .
B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய அனைத்து தேர்வர்கள்
பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் இன்று
வெளியிடப்படுகிறது.
மேலும் , பாடவல்லுநர்களின்
முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது. மேற்கொண்டு எவ்வித
ஆட்சேபணைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க இயலாது . பாட வல்லுனர்களின்
முடிவே இறுதியாகும் .
நாள் . 12.04.2025 தலைவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...