13.03.2025 மீண்டும் ஜாக்டோ - ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக , பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்துவது , தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது.
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் , ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார் . ஆகவே நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம் . ஆனால் 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது . எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.
ஆகவே 14.03.2025 நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து 23.03.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடவடிக்கைக்கு செல்வதென முடிவாற்றப்பட்டது . அப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் . அரசுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலாக எழுச்சிகரமாக பங்கேற்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அதனடிப்படையில் இன்று ( 08.04.2025 ) நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...