கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை சேர்ந்த ஆசிரியர் சிபின். இவர் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரை கம்பால் அடித்துள்ளார். இதனால் இவருக்கு எதிராக அந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் விழிஞ்சம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிபின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் முன் ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது அவர் ஆசிரியரின் கையில் பிரம்பு வைத்திருக்கலாம். அதை எப்போதும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்களுடன் பிரம்பு இருப்பது மாணவர் சமூகத்தில் ஒரு உளவியல் விளைவை உருவாக்கும்.
இதன் மூலம் மாணவர்களை சமூக தீமைகள் செய்வதிலிருந்து விலக்கி வைக்க முடியும். பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் போது அல்லது ஒரு மாணவனின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக எந்த தீமையும் இல்லாமல் ஆசிரியர் தாக்கினால் அதற்காக அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்வி முறையை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர் சமூகத்தின் நலன்களை பாதுகாக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கை.
ஒரு மாணவருக்கு அறிவுரை வழங்கியதாலோ அல்லது ஒழுக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைக்காக சிறிய தண்டனைகளை வழங்கினாலோ எந்த ஆசிரியரும் பாதிக்கப்படக்கூடாது.
கிள்ளுதல், முறைத்தல், அடித்தல், குத்துதல் போன்ற புகாருடன் காவல்துறையை சில பெற்றோர்கள் அணுகுவர். இது போன்ற புகார்கள் பெறப்பட்டால், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி முதற்கட்ட விசாரணை போலீஸ் அதிகாரிகள் நடத்த வேண்டும். இது போன்ற நிலையில் எந்த ஆசிரியரையும் கைது செய்யக்கூடாது.
சிறிய செயல்களுக்கு கூட வழக்கு தொடுப்பதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள் நம் சமூகத்தில் நிறைய உள்ளனர். இது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆசிரியர்கள் நமது சமூகத்தின் போற்றப்படாத ஹீரோக்கள். அவர்கள் நமது எதிர்கால தலைமுறையின் மனம், இதயம் மற்றும் ஆன்மாவை வடிவமைக்கின்றனர்.
எனவே ஆசிரியர்களின் மன உறுதியைக் குறைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது.
இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை டிஜிபி வெளியிட வேண்டும். மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஆயுதங்களை பயன்படுத்துவது, போதைப் பொருள் மற்றும் மது அருந்துவது பற்றிய செய்தி அறிக்கைகள் அதிகமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய உத்தரவு அவசியம் என்று அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும் - கேரள ஐகோர்ட் கருத்து
``மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது...'' - ஐகோர்ட் நீதிபதி கருத்து
கேரள உயர்நீதிமன்றம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் முன் ஜாமின் பெறுவதற்காக ஆசிரியர் கேரள ஐகோர்ட்டில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"பள்ளி மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்காக ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பு வைத்திருக்க வேண்டும். கம்பை உபயோகிக்காமல் அதை ஆசிரியர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
ஆசிரியர் மாணவர்கள்
மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது. யாராவது புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீஸார் உடனே வழக்குப்பதிவு செய்யக்கூடாது. இளம் தலைமுறையினரின் செயல்பாடு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இளம் தலைமுறையில் சிலர் போதை பொருள்களுக்கு அடிமைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. முன்பு இப்படி ஒன்றும் இல்லை. ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செய்திகள் இப்போது வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும் " என ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...