Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளியில் ஆண்டு விழாவால் தலைமை ஆசிரியருக்கு வந்த சிக்கல்

annual%20day
அரசுப் பள்ளிகளில் மார்ச் 31ஆம் தேதிக்குள் பள்ளி ஆண்டு விழா நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை கற்ப பள்ளிக்கல்வித்துறையால் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவால் தலைமையாசிரியருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆம்பூர் அருகே நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கலந்துகொண்டு குத்து பாடலை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று குத்து பாடலை பாடியை சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுப் பள்ளி விழாவில் குற்றப் பின்னணி உள்ளவர் எப்படி கலந்துகொண்டார்? என்ற சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் (மார்ச் 22) இரவு பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு நடன போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், இதில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும் பங்கேற்றார். அவர் விழா மேடையில் சினிமா பாடலை பாடி அசத்தினார்.

ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் மீது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கணேஷ் பலமுறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் கணேஷ் அரசுப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்றதும், விழா மேடையில் குத்து பாடலை பாடியதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் கணேஷ் அரசுப் பள்ளியில் நடந்த விழாவில் எப்படி பங்கேற்றார்? அவருக்கு யார் அழைப்பு விடுத்தார்கள்? என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரிடம் கேட்டபோது, "பள்ளி ஆண்டு விழாவிற்கு துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி என்ற முறையில் சுவிதாவை பங்கேற்க அழைத்தோம். ஆனால், அவரது கணவரான கணேஷ் விழாவில் பங்கேற்று பேசி பாடல் பாடியதாகவும், அவரை நாங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நபர் பங்கேற்று குத்து பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!