அண்ணா
பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக இணையவழி எம்பிஏ படிப்பு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை
ஆகிய 2 பாடப் பிரிவுகளில் ஆங்கில வழியில் இந்த எம்பிஏ படிப்பு
வழங்கப்படுகிறது.
இணையவழி எம்பிஏ படிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தொலைதூரக் கல்வி வாரியம் இரண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளன. இந்த எம்பிஏ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். இணையவழியில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் சேர விரும்புவோர் https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதம் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...