Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு: மாணவர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

 

நீட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் மார்ச் 7-ம் தேதிக்​குள் முடிவடைய உள்ள நிலை​யில், மாணவர்கள் துரிதமாக விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) அறிவுறுத்​தி​யுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்றும் தனியார் மருத்​துவக் கல்லூரி​களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு​கள், சித்தா, ஆயுர்​வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்​துவப் படிப்​பின் அகில இந்திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்​தப்​படு​கிறது.

அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரி​களில் பிஎஸ்சி நர்சிங் படிப்​புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்​படி, 2025-26-ம் கல்வி​யாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறை​யில் நடைபெற உள்ளது. இந்த தேர்​வுக்கான இணையதள விண்​ணப்பப் பதிவு கடந்த பிப்​ரவரி 7-ம் தேதி தொடங்​கியது. இதற்கான காலஅவ​காசம் மார்ச் 7-ம் தேதி​யுடன் நிறைவு பெறவுள்​ளது.

விருப்​ப​முள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்​தளம் வழியாக விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்தப் பணிகளை இறுதிநாள் வரை தாமதம் செய்​யாமல், முன்​கூட்​டியே முடித்​தால் கடைசிநேர சிரமங்களை தவிர்க்​கலாம். ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்​ணப்​பிக்க வேண்​டும். நீட் தகுதித் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்​வுக்கான ஹால்​டிக்​கெட் மே 1-ம் தேதி வெளி​யிடப்​படும்.

அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளி​யிடப்​படும். தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் வழிமுறை​கள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்​பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்​சல் வாயிலாக தொடர்பு ​கொண்டு ​விளக்​கம் பெறலாம் என்று என்டிஏ வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!