Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராணுவ விஞ்ஞானிகள் செய்யும் பணி என்ன?

 


ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவை பற்றி...


* டாக்டர் அப்துல் கலாம் பணியாற்றிய, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக உள்ளார்

* போர் விமான இன்ஜின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்

* விமான இன்ஜின் தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்

* இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்து நுால்களை எழுதி உள்ளார்

* தன் அறிவார்ந்த பேச்சுகளின் மூலம், மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்

* இவர், ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியது.

நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


ராணுவ விஞ்ஞானிகள் செய்யும் பணி என்ன?


நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப்படைகளுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கருவிகள், ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது ராணுவ விஞ்ஞானிகளின் பணி. மேலும், சி.ஆர்.பி.எப்., உட்பட துணை ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்கள், ஆளில்லா ட்ரோன்களை உருவாக்குவதில், இவர்களின் பங்களிப்பு அதிகம்.

ராணுவ விஞ்ஞானிகளில் புகழ்பெற்ற டாக்டர் அப்துல் கலாமின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படி?

சிறப்பான கேள்வி... நான் ராணுவ விஞ்ஞானி ஆனதற்கு முக்கிய காரணம், டாக்டர் அப்துல் கலாம் தான். ராணுவ விஞ்ஞானி என்ற பதவி உள்ளது என்பதே, அவரால் தான் தெரிந்து கொண்டேன். பொறியியல் பட்டம் பெற்றபின், முதன் முதலாக, அக்னி சிறகுகள் புத்தகத்தை நுாலகத்தில் படித்தேன். பொதுவாக புத்தகங்களை, நாம் புரட்டுவோம். ஆனால், அப்புத்தகம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. அதை படித்த போது, அவரை போலவே ஆக வேண்டும் என கனவு கண்டேன்; அந்த கனவை நனவாக்கினேன்.

மாணவர்கள், ராணுவ விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?


விஞ்ஞானிகள் ஆவதற்கான எஸ்.இ.டி., என்ற நுழைவுத்தேர்வு, ஆண்டுதோறும் நடக்கிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்வு நடக்கும். இதிலும் தேர்ச்சி பெற்றால், நீங்களும் ராணுவ விஞ்ஞானியே. இந்த தேர்வை எழுதுவதற்கு பொறியியல், மருத்துவம், அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருப்பது அவசியம். எஸ்.இ.டி., தேர்வு எழுதுவதற்கும் சில தகுதி தேர்வுகள் நடக்கின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, அந்த தேர்வை எழுத முடியும்.

புனேவில் உள்ள ராணுவ கல்லுாரி தான் முதன்மையான பயிற்சி மையமா?


டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் புனேவில், பாதுகாப்பு உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவி உள்ளது. இங்கு, ராணுவ விஞ்ஞானிகளுக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதில், வகுப்பறை பயிற்சியை தாண்டி, போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ராணுவ டேங்கர்கள் போன்றவை குறித்து நேரடியாக அழைத்துச்சென்று பாடம் நடத்துவர்; அதில் பயணமும் செய்து விளக்குவர். பின்னர், உங்களுடைய ஆராய்ச்சிகளை தொடரலாம். இத்துறையில், பிரகாசமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

ராணுவ விஞ்ஞான பணிகளில் பெண்களும் உள்ளனரா?


ஏவுகணை ஆராய்ச்சி, நீர்மூழ்கி கப்பல் சோதனை, பீரங்கி டாங்க் சோதனை என பல துறைகளில் பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். டி.ஆர்.டி.ஓ.,வைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ், உலகம் முழுதும் அறியப்படும் நபராக உள்ளார். அக்னி ஏவுகணை திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றினார் என்பதை யாரும் மறக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையில் பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். பாதுகாப்பு துறையின் எப்பிரிவுகளிலும் பெண்கள் பணிபுரியலாம்.

ராணுவ விஞ்ஞானியாக பணிபுரிய ஆசை கொள்ளும், பள்ளி மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?


மாணவர்கள் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது, அவர்களின் சிந்தனைத்திறன் வெளிப்படும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஒரு மாணவரை மதிப்பிட கூடாது. அது சரியல்ல. ஆசிரியர், பெற்றோர் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் வகுப்பறையை தாண்டி வாசிப்பதும், பாடப்புத்தகங்களை தாண்டி யோசிப்பதும் நல்ல விஷயம். இதுவே, விஞ்ஞானியாக மாறுவதற்கு முதல் படி.

அப்துல் கலாமின் அறியப்படாத குணம், சாதனை?


அப்துல் கலாமின் சிந்தனைகளை பார்த்து மிரண்டுள்ளேன். அவர், உபயோகப்படாதவர்கள் என யாரும் இல்லை. நாம் தான் அவர்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பார். என் மூளை உன் வலியை குறைக்கட்டும் என்பார். சுதந்திர இந்தியாவில் முக்கிய திட்டங்களில் ஒன்றான, ஐம்பது ஏவுகணைகளை ஒரு சேர தயாரிக்கும் திட்டத்தின் முகமாக அவர் அறியப்பட்டார்.

கொசு மருந்து தயாரிக்கப்படுகிறதே?


டி.ஆர்.டி.ஓ.,வில் உயிரை பறிக்கும் ஆயுதங்கள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை; உயிரை காக்கும் படைப்புகளும் தயாரிக்கப்படுகின்றன. ராணுவ வீரர்கள் தங்களை கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பதற்கு, DEPA எனும் மருந்து உள்ளது. இதை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கி பயன்படுத்த முடியும். டிஷ்யு பேப்பர் வடிவிலும் கூட கொசுக்களை அழிப்பதற்கு மாத்திரை கண்டுபிடித்துள்ளோம்.

கொசு மாத்திரையா... கேட்பதற்கே வித்தியாசமாக உள்ளதே?


ராணுவ வீரர்கள் மலைப்பகுதியில் இருக்கும் போது, அங்குள்ள நீர்நிலைகளில் காணப்படும் உள்ள கொசுக்களை அழிப்பதற்கு, இந்த மாத்திரையை தண்ணீரில் துாக்கி போட்டால் போதும். இந்த மாத்திரை ஒரு வாரத்திற்கு மேல், தண்ணீரில் மிதந்து கொண்டே இருக்கும். அப்போது, அங்கு உள்ள கொசு முட்டைகள் அழிக்கப்படும்.

மிளகாயில் ஆயுதம் தயாரிப்பது குறித்து?


உலகில் உள்ள காரமான மிளகாய்களில் ஒன்றான, புட் ஜோலக்கியா இந்தியாவில் உள்ளது. இந்த மிளகாயை பயன்படுத்தி, டி.ஆர்.டி.ஓ., காப்சிஸ் ஸ்பிரே என்ற ஆயுதத்தை உருவாக்கி உள்ளோம். இதை எதிரிகள் மீது பயன்படுத்தினால் பயங்கரமான கண் எரிச்சல், தோல் எரிச்சல் ஏற்படும். இதை பயன்படுத்தி, பயங்கரவாதிகளை செயலிழக்க வைக்க முடியும்.

பாதுகாப்பு துறையின், ஐ டெக்ஸ் திட்டம் பற்றி?


இத்திட்டத்தின் குறிக்கோள், பாதுகாப்பு துறையில் மேம்பாடு அடைவது குறித்ததே. தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு தொடர்பான புதுமையான ஆராய்ச்சிகளுக்கான சவாலாக உள்ளது. இதில் இளைஞர்கள் பங்கேற்கலாம்; 10 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கப்படுகிறது.

ஸ்டார்ட் அப்கள் துவங்குவதற்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன?


ஸ்டார்ட் அப்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த முழு விபரமும் டி.ஆர்.டி.ஓ., வலைதளத்தில் உள்ளது. இளைஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிடலாம். இதன் மூலம் அவர்களுக்கான யோசனைகள், நிதி உதவிகள் வழங்கப்படும்.

டி.ஆர்.டி.ஓ., நடத்தும் போட்டிகள் என்னென்ன?


அப்துல் கலாமின் நினைவாக, துணிந்து கனவு காண் எனும் தலைப்பில் ஆண்டுதோறும் போட்டி நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை; 18 வயது ஆகி இருந்தால் மட்டும் போதும். இதற்கு மொழி தடையில்லை. dare to dream என்ற இணையப் பக்கத்திற்கு சென்று போட்டியில் பங்கு பெறலாம். இதில் வென்றவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசு கிடைக்கும். மேலும், விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

உயர்கல்வி மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறுவதற்கு செய்ய வேண்டியது என்ன?


ஜே.இ.இ., தேர்வின் மூலம் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. புனேவில் டி.ஆர்.டி.ஓ., ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது. இங்கு எம்.டெக்., பிஎச்.டி., போன்ற ராணுவம் சார்ந்த பட்ட மேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான முக்கியத்துவம்?


போரில் ஐந்தாம் தலைமுறையின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஐந்தாம் தலைமுறை விமானங்கள் மற்ற போர் விமானங்களை விட மேம்பட்டதாக இருக்கும். இதன் காரணமாகவே, உலகளாவிய பேச்சுகளில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பற்றி குறிப்பிடப்படுகிறது. நம் ஆராய்ச்சியாளர்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் குறித்த ஆராய்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை?


இந்த தலைமுறையினரை touch screen generation என்றே அழைப்பேன். முன்னேறிய தொழில்நுட்பம் அவர்கள் கையில் ஊஞ்சலாடுகிறது. நேரத்தை வீணாக்காதீர்கள்; எதிர்கால கனவை நோக்கி பயணியுங்கள்.

அப்துல் கலாமின் நினைவாக, துணிந்து கனவு காண் எனும் தலைப்பில் ஆண்டுதோறும் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க, எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. 18 வயது ஆகி இருந்தால் மட்டும் போதும். இதற்கு மொழி தடையில்லை. dare to dream என்ற இணையப் பக்கத்திற்கு சென்று போட்டியில் பங்கு பெறலாம். இதில் வென்றவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசு கிடைக்கும். மேலும், விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

அப்துல் கலாமின் சிந்தனைகளை பார்த்து மிரண்டுள்ளேன். அவர், உபயோகப்படாதவர்கள் என யாரும் இல்லை. நாம்தான் அவர்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பார். என் மூளை உன் வலியை குறைக்கட்டும் என்பார். சுதந்திர இந்தியாவில் முக்கிய திட்டங்களில் ஒன்றான, ஐம்பது ஏவுகணைகளை ஒருசேர தயாரிக்கும் திட்டத்தின் முகமாக அவர் அறியப்பட்டார்.

ராணுவ விஞ்ஞானியாக பணிபுரிய ஆசை கொள்ளும், பள்ளி மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?


மாணவர்கள் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது, அவர்களின் சிந்தனைத்திறன் வெளிப்படும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஒரு மாணவரை மதிப்பிட கூடாது. அது சரியல்ல. ஆசிரியர், பெற்றோர் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் வகுப்பறையை தாண்டி வாசிப்பதும், பாடப்புத்தகங்களை தாண்டி யோசிப்பதும் நல்ல விஷயம். இதுவே, விஞ்ஞானியாக மாறுவதற்கு முதல்படி.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!