Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.03.2025

  

 மாக்சிம் கார்க்கி

  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்:பண்புடைமை

குறள் எண்:1000

 பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
 கலம்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:
தீயவன் பெற்ற பெரும் செல்வம். பால் அது வைக்கப்பட்ட பரத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.

பழமொழி :

Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழி வகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே,உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.  ஏனேன்றால் பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது. ---விவேகானந்தர்

பொது அறிவு : 

   1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?            

விடை :  நாக்கு.    

2.உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?

 விடை : கிராண்ட் கால்வாய்(  சீனா )

English words & meanings :

 Fever.       -       காய்ச்சல்,

Headache.   -     தலைவலி

வேளாண்மையும் வாழ்வும் : 

 பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மார்ச் 28

மாக்சிம் கார்க்கி  அவர்களின் பிறந்தநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 முரசொலி 


ஒரு நரி பசியினால் இரை 

தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று 

அது பயந்தது. 

தன் பசி தீருமுன் தான் 

பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. 

நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. 

இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

நீதி: கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே நன்று.

இன்றைய செய்திகள்

28.03.2025

* ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

* ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

* பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை.

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

* சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று   நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* The high court ordered to provide pension money benefits immediately to the Government Transport Corporation.

* A separate resolution in Tamil Nadu Legislative Assembly regarding the matter on Vagbu

*  In the Gulf of Mannar in Ramanathapuram, the  Ram Sethu sand dunes  which connects Sri Lanka and India  connecting  have also been found to be the largest reproductive site of the six rare seawater bird species.

* The Parliamentary Standing Committee recommends the immediate release of funds for the states who do not accept the BMSR scheme.

* The world countries have  retaliated  to the announcement of US President Donald Trump's announcement that the US imported vehicles and its major spare parts will be permanently charged.

* IPL in Chennai Metro trains will be operated till 1:00 pm, as the cricket match is being held today, Chennai Metro Rail Company said.

* The International Table Tennis Tournament started in Chennai yesterday.

Covai women ICT_போதிமரம்





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!