 |
உலக தண்ணீர் தினம் |
திருக்குறள்:
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
குறள்எண்:995
நகையுள்ளும் இன்னாத இகழ்ச்சி: பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.
பொருள்:
விளையாட்டிற்குங்கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளரிடம் காணப்படும்.
பழமொழி :
Hear more talk less
கேட்பதற்கு தீவிரம் பேசுவதற்கு மந்தமாயும் இருக்க வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.
2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.
பொன்மொழி :
நான் மெதுவாக நடப்பவன் தான் ; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.---ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு :
1. Flipkart நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
விடை: அமெரிக்கா.
2. மொபைல் போன் பேட்டரி எதனால் ஆனது?
விடை : லித்தியம் அயன்
English words & meanings :
Tailor. - தையல்காரர்
Teacher. - ஆசிரியர்
மார்ச் 22
உலக நீர் நாள் (World Water Day),
உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை
புத்திசாலி பூனை
ஒரு பூனை ஒரு பெரிய
மரத்துக்கு கீழே நின்றுக்
கொண்டு இருந்தது.
அப்போது வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. பூனை அதை உற்றுக் கேட்டது.
அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்தது.அந்த நரி பூனையிடம் ,
”வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்தால் எப்படி தப்பிப்பாய்? " என்று கேட்டது.
அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.இந்த மரத்தின் மீது
ஏறி உச்சிக்குப் போய் தப்பிப்பேன். அவைகள் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” என்று பதில் கூறியது.
“நீ எப்படி தப்பிப்பாய்” என்று பூனை நரியிடம் திருப்பிக் கேட்டது.
அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” என்று பதில் கூறியது.
அப்போது வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால் பூனை மளமளவென்று மரத்தின்மேல் ஏறியது.
வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்து கொண்டன.கடைசி நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் நரி மாட்டிக் கொண்டது
பூனை நரியைப் பார்த்து, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லையா”என்று கேட்டது.
நீதி: முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை கஷ்டம்.
இன்றைய செய்திகள்
22.03.2025
* குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
* தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
* கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன என அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியுள்ளார்.
* ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
* அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.
* தேசிய மகளிர் ஹாக்கி தொடர்: 2-வது நாளில் ஒடிசா, மணிப்பூர், அரியானா, ஜார்கண்ட் அணிகள் வெற்றி.
Today's Headlines
* Food Safety Department Officer Sathishkumar has advised drinking water manufacturing companies to refill water in drinking water cans only up to 30 times.
* Minister M. Subramanian stated in the Legislative Assembly that snake and dog bite medications are available in all 2,286 government primary health centers in Tamil Nadu.
* Express buses with features like cameras, SOS buttons, and modern fire suppression systems are expected to be in service by the end of April, according to Santhapriyan Kamaraj, founder of the Government Transport Enthusiasts Association.
* The Cabinet Committee on Security has approved the purchase of modern artillery worth ₹7,000 crore for the military.
* President Donald Trump has signed documents to dismantle the US Department of Education.
* Swiss Open Badminton Tournament: India's Trisha-Gayatri pair advanced to the quarterfinals.
* National Women's Hockey Tournament: Odisha, Manipur, Haryana, and Jharkhand teams won on the 2nd day.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...