டேராடூனில்
உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8-ம்
வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன்.1-ம் தேதி தேர்வு
நடக்கிறது
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர்
பிருந்தா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: டேராடூனில்
உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8ம்
வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 1ம் தேதி தேர்வு
நடக்கிறது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கொண்டதாக
இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகியவை
கொண்ட தாகும். கணக்குத் தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆங்கிலத்தில்
அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வில்
தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு
நடத்தப்படும். இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும்
முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை“ கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய
ராணுவக் கல்லூரி, கர்ஹி கான்ட் டேராடுன், உத்தராகண்ட் 248003” என்ற
முகவரிக்கு வரைவோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.rimc.gov.in
என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவினர் ரூ.600 மற்றும்
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான
வரைவோலையை அனுப்பி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தவறான
அல்லது முழுமையடையாத முகவரி மற்றும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது
இழப்புக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி பொறுப்பேற்காது விண்ணப்பதாரரின்
பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 2013ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதிக்கு முன்னதாகவும் 2014ம் ஆண்டு
ஜூலை 1ம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது. ராணுவ கல்லூரியில்
சேர அனுமதிக்கப் படும் போது 20126ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில்
அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி
பெற்றவராக வோ இருத்தல் வேண்டும்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு வரும்
மார்ச் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும்
விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின்
இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...