கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன், 59, வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடைபெற்ற திருப்பயர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து, கீழே இறங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...