
வருகிற ஏப்ரல் மாதம் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை மாநில திட்ட இயக்ககம் வாயிலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்துவதற்கு ஏதுவாக பள்ளிக் கல்வித்துறை சில உத்தரவுகளை பள்ளிகளுக்கு விடுத்திருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் இணைய சேவை கட்டணத்தை செலுத்துவதில் பாக்கி வைத்தது தொடர்பான செய்தி பரபரப்பான நிலையில், கல்வித் துறை இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பி.எஸ்.என்.எல். இணைய சேவை தரவுகளை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதனை உடனடியாக செய்ய வேண்டும். பிற இணைய சேவை நிறுவனங்கள் மூலமாக இணைய சேவை பெற்றிருக்கும் அரசு பள்ளிகளும், இணைய சேவை வசதியை பெறாத பள்ளிகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...