Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7 கோள்களும் காட்சி தரும் அதிசய வானியல் நிகழ்வு : பிப்.28ல் கண்டு ரசிக்கலாம்

 



 வரும் பிப்.28 இரவு வானில் ஒரு அற்புதமாக 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது.

மகா கும்பமேளா 2025, கடந்த ஜன.13ல் தொடங்கி பிப்.26 மகா சிவராத்திரியோடு நிறைவடைகிறது. இதையொட்டி வானத்தில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நடக்கிறது.

பிப்ரவரி 28ம் தேதி, இரவு வானில் ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இவற்றில், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து கொள்கிறது.

இதன் மூலம் சூரிய குடும்பத்தின் ஏழு கிரகங்களை ஒரே இரவில் பார்க்க முடியும். இவற்றில் ஐந்து கிரகங்களை வெறும் கண்களால் மட்டுமே பார்க்க முடியும்; யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கிரகங்களை மட்டும் பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் உதவியுடன் பார்க்கலாம்.

இதுபோன்ற அண்ட நிகழ்வுகள் ஆன்மிக ஆற்றல்களைப் பெருக்குவதாக நம்பிக்கை உள்ளது.

இந்த அரிய வானியல் நிகழ்வு பற்றி அறிவியலாளர்கள் கூறியதாவது:



தற்போது மட்டுமின்றி, ஆகஸ்ட் 2025 நடுப் பகுதியிலும் ஆறு கிரகங்கள் தெரியும் இதேபோன்ற காட்சியைக் காண முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!