மத்திய அரசின் முயற்சியால், ஆன்லைன் வாயிலாக பல்வேறு படிப்புகளை வழங்கும் 'ஸ்வயம்' தளத்தில், கடந்த 2017ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்களில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்களே படிப்பை நிறைவு செய்துள்ளனர் என்று நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
காலாவதியான பாடத்திட்டம், வளைந்து கொடுக்க முடியாத கற்பித்தல் முறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு உள்ளிட்டவையே அதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதிவு செய்பவர்கள் அனைவரும் படிப்பை நிறைவு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்வயம் தளத்தில், 9ம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரையிலான மாணவர்கள் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் அணுகுவதற்கு வசதியாக உள்ளது. அனைத்து படிப்புகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...