Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2025

 

 நுரையீரல்

   






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்:பெருமை

 குறள் எண்:976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
 பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்:
பெரியோரைப் போற்றி அவரை பின்பற்றி பெருந்தன்மை கொள்வோம்
எனும் கருத்து சிறியவர் அறிவிற்படுவதில்லை

பழமொழி :

அச்சத்திற்கு மருந்து இல்லை

There is no medicine for fear.

இரண்டொழுக்க பண்புகள் :   

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.  

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.


-- தத்துவஞானி கன்பூசியஸ்---

பொது அறிவு : 

1. மனித உடலில் எடை குறைந்த உடல் உறுப்பு எது? 

விடை:   நுரையீரல்.        

2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?

 விடை : கால்சியம்

English words & meanings :

 Hospital.   -      மருத்துவமனை
 
Hotel.        -       உணவகம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

நீதிக்கதை

 பீர்பாலின் புத்திசாலித்தனம்


பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல் 

அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து 

அறிய ஆவல் ஏற்பட்டது.


அதனால் ஒரு கடிதத்தில் , "மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு 

நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள் "என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமாக அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.


கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்து போய் , ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பி, பீர்பாலிடம் கடிதத்தை காட்டினார்.


பீர்பால் சிறிது நேரம் யோசித்தார் .பின்பு , அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு கூறினார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.


பின்பு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்கள்?   என்று விசாரித்தார் .


அதற்கு பீர்பால், 'மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்" என்று கூறினார் .


பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த  பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோடு மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்தை மூடினார் .


நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.


பின்பு,அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்? என்று கேட்டார் . பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம் என்று எழுதி அனுப்பினார்.


அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தார்

இன்றைய செய்திகள்

25.02.2025

* கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், பூமி மீது மோத இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றும், நிலவு மீது மோத வாய்ப்பு அதிகம் எனவும் தற்போது கூறியிருக்கின்றனர்.

* தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள். சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகளை இங்கு வாங்கலாம்.

* சென்னைக்கான முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

* ரியோ ஓபன் டென்னிஸ் தொடரில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* Scientists have warned that the 2024 YR4 meteorite, which was discovered last year, will clash on the earth. But they are now said that this is less likely and that the moon is more likely to collide.

* CM pharmacies opened in 1000 places across Tamil Nadu. Drugs can be purchased at a lower price of 50 percent to 75 per cent than in the market.

* The main drinking water source for Chennai, Sembarambakkam Lake is reaching full capacity, is likely to open water for drinking water.

* Wildfire has occurred in the Western Ghats of Sungandi near Eraniyal in Kanyakumari district.

* In the Rio Open Tennis Series, Argentina's Sebastian Base won the championship title.

Covai women ICT_போதிமரம்






Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!