Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2025

 

 

 பன்னாட்டு தாய்மொழி நாள்


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்: 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
 தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.

பொருள்:
மகளிர் தங்கள் மன உறுதியால் கற்பை காப்பது போல் ஒருவன் ஒழுக்கம் தவறாதிருப்பின் பெருமை உண்டு.

பழமொழி :

தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.  

If humble thou shalt prosper.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.

உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.

அறிஞர் அண்ணா.

பொது அறிவு : 

1. லட்சத்தீவின் மாநில மலர் எது? 

விடை : நீலக்குறிஞ்சி.       

2. தமிழ்நாட்டின் மாநில மலர் எது? 

விடை: செங்காந்தள் மலர்

English words & meanings :

 Factory.   -     தொழிற்சாலை
 
Farm.     -       பண்ணை

வேளாண்மையும் வாழ்வும் : 

  பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

பிப்ரவரி 21

பன்னாட்டுத் தாய்மொழி நாள்



பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Dayபெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ)  1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழிபண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

நீதிக்கதை

 நரியை வென்ற கழுதை


 ஒரு நாள் காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதை கவனித்த நரி ஒன்று கழுதையை அடித்து கொல்லும் நோக்கத்துடன் கழுதையின் மேல் பாய்ந்தது.


தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்துவிட்டது கழுதை.

 ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது தந்திரம் செய்து தான் தப்பிக்க வேண்டும் என்று கழுதை தீர்மானித்தது.


ஓநாய் பாய்ந்து வரும் போது சற்று விலகிக் கொண்டு, "ஓநாயரே! உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம் மாத்திரம். நான் இன்று உனக்கு இரையாக போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது.நானும் உனக்கு இரையாக தயாராக தான் இருக்கிறேன். அதற்கு முன்  நான் சொல்ல வேண்டிய விஷயத்தை  தயவுசெய்து கேட்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது கழுதை.


 "நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை சீக்கிரம் சொல்" என்று கேட்டது ஓநாய்


"ஓநாயரே! என் காலில் முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் தாங்கள் என்னை சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி விடும். அது உங்களுக்கு கடுமையான வேதனையை தருவதுடன்,உங்கள் உயிரையே பலி வாங்கி விடும். முதலில் என் காலில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு பின்னர் என்னை நீங்கள் சாப்பிடுவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை" என்று கூறியது கழுதை.


 ஓநாயும் ஒத்துக்கொண்டது கழுதை தன் பின்னங்கால்களை எடுத்து ஓநாயிடம் காண்பித்தது ஓநாயும் முள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.

ஓநாய் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.


நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் சிந்தித்து செயல்பட்டால் இறுதி வெற்றி நமக்கே.

இன்றைய செய்திகள்

21.02.2025

* தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

* தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மார்ச் 12-ம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக்  ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* புரோ ஹாக்கி லீக்: நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்.

Today's Headlines

* Tamil Nadu's budget is set to be approved on February 25, with Chief Minister M.K. Stalin leading the cabinet meeting at the Secretariat in Chennai. This meeting is crucial as it will finalize the state's budget, outlining its financial plans and allocations for the upcoming year.

* In other news, Chennai's temperature is expected to rise by 4 degrees Celsius above normal until February 23, according to the Chennai Meteorological Centre.

* ISRO has successfully developed the world's largest vertical rocket stage, weighing 10 tons, marking a significant milestone in India's space program. 

* The Space X Dragon spacecraft is scheduled to launch on March 12 and will dock at the International Space Station. Astronauts Sunita Williams and Butch Wilmore will return to Earth on March 19 after an eight-month mission.

* In sports, India defeated Germany in the Pro Hockey League, while Tamil Nadu won six gold medals in the National Para Athletics Championship.

Covai women ICT_போதிமரம்





Related Posts:

2 Comments:

  1. Shalini
    5
    10766115dpweqwerty

    ReplyDelete
  2. Shalini
    tc
    10766115dpweqwrrty

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!