இரண்டொழுக்க பண்புகள் :
* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன்.
*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.
பொன்மொழி :
இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
--தத்துவஞானி கன்பூசியஸ்-
பொது அறிவு :
1. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.?
விடை : 2013.
2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு காரணம் என்ன?
விடை : அடர்த்தி
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இதில் நாம் சந்திக்கும் சவால்கள் நீர்வளங்களை திறம் படநீர்நிலை மாசுபாடு, பருவகால மழைப்பொழிவு மாறுபாடு, உப்பு ஊடுருவல், வெள்ளப்பெருக்கு பொறுப்பு, சுத்திகரிக்கப்படாத இணைக்கப்பட்ட கழிவுநீர், யூட்ரோஃபிகேஷன் மற்றும் இவற்றை நிவர்த்தி செய்வது அடங்கும்.
நீதிக்கதை
பெருமாளும் சதாசிவமும்
ஓர் ஊரில் சதாசிவம் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு உடன்பிறந்தவர்கள் அண்ணன்கள் இருவர்.
தம்பி ஒருவன்.
தந்தை இறந்தபின் அவர் தேடி வைத்த செல்வத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டனர். தந்தையின் செல்வத்தில் ஒவ்வொருவனுக்கும் கால் பங்குதான் கிடைத்தது.
அதே ஊரில் பெருமாள் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை. அவனது தந்தை,சதாசிவத்தின் தந்தையளவு செல்வம் படைத்தவர் அல்லர், இருந்தாலும் அவர் தேடி வைத்த செல்வம் முழுவதும் பெருமாளுக்கே உரிமையாயிற்று.
பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் சதாசிவத்துக்குத் தான் குறையுடையவன் போல் எண்ணம் தோன்றும். பெருமாளைப் போல் தனி மகனாகப் பிறந்திருந்தால் தனக்கு தன் தந்தையின் செல்வம் முழுவதும் சேர்ந்திருக்கும். தான் மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருக்கலாம் என நினைப்பார்.
ஒரு நாள் நண்பன் என்ற முறையில் அவன் பெருமாளைச் சந்தித்து வரச் சென்றான். பெருமாள் படுத்திருந்தான். சதாசிவம் அருகில் சென்றபின்தான் அவன் தோயுற்றுப் படுத்திருக்கிறான் என்று அறிந்தான். சதாசிவம் ஆதரவான குரலில் “மருந்து வாங்கிச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டான். “மருந்து வாங்கி சாப்பிடத்தான் வேண்டும். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. வீட்டில் துணைக்கு ஒருவரும் இல்லை...” என்று சொல்லிக் கலங்கினான் பெருமாள்.
சதாசிவம், "கலங்காதீர்கள்,இதோ நான் மருத்துவரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி விரைந்து சென்றார், மருத்துவர் வந்து பார்த்து, மருந்து கொடுத்துச் சென்ற பின் பெருமாள் சதாசிவத்தை நோக்கி, “நண்பரே, அண்ணன் தம்பியரோடு பிறந்த நீங்கள் என்னையும் உங்கள் உடன் பிறந்தவன் போல் பாவித்துச் நீங்கள் செய்த உதவியை நான் மறக்கமாட்டேன்” என்று கூறினான்.
தான் அண்ணன் தம்பியருடன் பிறக்கவில்லையே என்ற
குறை பெருமாள் பேச்சில் வெளிப் பட்டது. அதைக் கேட்டு சதாசிவம்
தான் எவ்வளவு பாக்யசாலி என்று நினைத்து உருகினார் .
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...