நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. நீட் நுழைவுத்தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இணையவழியில் நடத்தப்படலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து என்டிஏ நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் "இந்த ஆண்டும் நீட் தேர்வு பேனா, காகிதம் மூலமாக ஓஎம்ஆர் எனப்படும் விடைத் தெரிவு குறிப்பு முறையில்தான் நடத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு என்டிஏ இணையதளத்தை (https://www.nta.ac.in/) பார்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...