2024-
2025 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித்
தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று
நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை
ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி
நாள் 25.01 . 2025 என தெரிவிக்கப்பட்டது . தற்போது , மாணவர்களின் நலன்
கருதி இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால
அவசாசம் 29.01.2025 மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்
தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...