Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS கல்வி உதவித்​தொகை தேர்வு: ஜன.24-ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்பம்

1345363

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜன.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.


அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஜன.24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive