Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி விலக்கு மாறுகிறது - பட்ஜெட்டுக்கு பின் எவ்வளவு


income-tax


கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் 2 மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். 1. வருமான வரியில் பழைய முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள், அதாவது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். அதேபோல் 2. புதிய வரி முறையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட்டுக்கு பின் எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி?: ₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம். நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி முறையில் 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 


அதை மொத்தமாக விலக்கி அரசு சட்டம் கொண்டு வரலாம் என்கிறார்கள். இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். புதிய வருமான வரி முறை; புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.

இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 


7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.

ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது.

இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும் பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை.

ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive