இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முழுநேர முனைவர் படிப்பு (பிஎச்டி) பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) ஊக்கத்தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவ ஆதி திராவிட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tn.gov.in/formdept_list.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “ஆணையர், ஆதி திராவிடர் நல ஆணையரகம், எழிலகம், (இணைப்பு கட்டிடம்) சேப்பாக்கம், சென்னை 600 005” என்ற முகவரிக்கு பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த உதவித்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...