Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சைனிக் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

1347873

நாடு முழு​வதும் அமைந்​துள்ள 33 சைனிக் பள்ளி​களில் 2025-26-ம் கல்வி​யாண்​டில் 6, 9-ம்வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்​ தேர்வு பிப்​ரவரி மாதம் நடத்​தப்பட உள்ளது. இந்த தேர்​வுக்கான இணையதள விண்​ணப்பப் பதிவானது கடந்த டிச. 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலை​யில் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் நாளை​யுடன் நிறைவு பெறுகிறது.விருப்​ப​முள்​ளவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்பக் கட்ட​ணமாக எஸ்சி/எஸ்டி பிரி​வினர் ரூ.650-ம், இதர பிரி​வினர் ரூ.800-ம் இணைய​வழி​யில் ஜன. 24-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

இதுதவிர விண்​ணப்​பிக்​கும் வழிமுறை​கள், தகுதி​கள், ஹால்​ டிக்​கெட் வெளி​யீடு உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைத்​தளத்​தில் (www.nta.ac.in) அறியலாம். சந்தேகங்கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்​பு கொண்டு உரிய ​விளக்​கம் பெறலாம் என்று என்டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive