Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொங்கல் போனஸ், பணிநிரந்தரம் வழங்க வேண்டும் : பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

பொங்கல் போனஸ், பணிநிரந்தரம் வழங்க வேண்டும் :

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 13 ஆண்டாக காத்திருப்பு :

13 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக  பணிபுரியும்,

தற்போது ₹12,500 ரூபாய் சம்பளம் பெறுகின்ற,

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு

இந்த முறையாவது 

பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

மேலும்,

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் 


என

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 

மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கோரிக்கை :

பள்ளிக்கல்வித்துறை மூலமாக தமிழக அரசு பள்ளிகளில்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்  திட்டத்தில்

பகுதிநேர ஆசிரியர்களாக 

உடற்கல்வி பாடத்தில்  3,700 பேர்,

ஓவியம் பாடத்தில் 3,700 பேர்,

கணினி அறிவியல் பாடத்தில் 2 ஆயிரம் பேர்,

தையல் பாடத்தில் 3,700 பேர்,

இசை பாடத்தில் 300 பேர், தோட்டக்கலை பாடத்தில் 20 பேர், கட்டிடக்கலை பாடத்தில் 60 பேர்,

வாழ்வியல்திறன் பாடத்தில் 200 பேர் என

மொத்தம் சுமார் 12 ஆயிரம் பேர் மாணவர்களுக்கு கற்று தருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் அப்போது 16 ஆயிரத்து ஐநூறு பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.


சம்பளம் உயர்வு முதன் முதலில்  2014 ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஆயிரம் காலியிடங்கள்  ஆனதால் 15 ஆயிரம் பேர் பணியில் இருந்தார்கள்.

இரண்டாவது முறையாக சம்பளம் உயர்வு 2017 ஆம் ஆண்டில் 700 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது மூன்றாயிரம் காலியிடங்கள் ஆனதால் 13 ஆயிரம் பேர் பணியில் இருந்தார்கள்.

மூன்றாவது முறையாக சம்பளம் உயர்வு 2021 ஆம் ஆண்டில் 2,300 ரூபாய் வழங்கப்பட்டதால் சம்பவளம், 10 ஆயிரம் ரூபாய் ஆனது.  அப்போது நான்காயிரம் காலியிடங்கள் ஆனதால் 12,500 பேர் பணியில் இருந்தார்கள்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தேர்தலின்போது 181வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் இடம்பெற்றது.


இதில் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் திமுக ஆட்சி நடக்கிறது.


பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை பகுதிநேர ஆசிரியர்கள் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டசபையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கொடுத்து குரல் கொடுத்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றார்கள்.


இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டில் சம்பளம் உயர்வு 2,500 வழங்கப்பட்டது.

இதனால் தற்போது 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

தற்போதும் காலியிடங்கள் ஏற்பட்டு சுமார் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

2,500 ரூபாய் சம்பள உயர்வுடன் சேர்த்து அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடு அறிவிப்போடு உள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.


மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், இபிஎப், இஎஸ்ஐ, குடும்பநலநிதி உள்பட எதுவுமே கடந்த காலங்களில் வழங்கவில்லை.


இதனால் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர்.


தற்போதும் காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தேமுதிக தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதுடன், திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.

மீண்டும் சட்டசபையிலும் கவன ஈர்ப்பு கொடுத்து பேச உள்ளார்கள்

எனவே, இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம் கைவிட்டு, இனி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

கவர்னர் உரையில் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக தமிழக அரசின் அறிவிப்பில் சேர்க்க வேண்டும்.

------

இங்கனம் :

S.செந்தில்குமார் 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

CELL  : 9487257203





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive