தமிழக பள்ளிக்கல்வித்துறையில், 'எமிஸ்' தளம் போன்று தற்போது, 'யுடைஸ்' இணையதளத்தில் மாணவர்கள் குறித்த 48 வகையான கேள்விக்கு பதில்களை பதிவேற்றம் செய்யச் சொல்வதால் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மேலாண்மை தகவல் முறைமையான எமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு என்ற இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இதில், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து தகவல்களையும் யுடைஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில், எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை யுடைஸ் தளத்தில் விடுபடாமல் சரிபார்க்க வேண்டும். விடுபட்டிருந்தால் ஜன., 27க்குள் சரி செய்ய வேண்டும். வெளிமாநில மாணவர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதில், 48 வகையான கேள்விகள் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், மொபைல் போன், ஜெனரல் புரபைல், என்ரோல்மென்ட் புரபைல், மாணவர் அட்மிஷன் எண், பள்ளியில் சேர்ந்த தேதி, மீடியம், முன்பு படித்த பள்ளி, வகுப்பு போன்ற விபரங்கள் என, 48 கேள்விகளுக்கான தகவல்களை பிப்., 10க்குள் யுடைஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், ஆசிரியர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய திணறி வருகின்றனர். ஓய்வு பாடவேளைகளில் இந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருப்பதால் ஆசிரியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கே படாதபாடு படவேண்டிய நிலையில், மீண்டும் யுடைஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...