தமிழ்நாடு
முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள்
அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன் . அந்தப் பணி ,
இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில்
நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள் , நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன் ! அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...