ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் இந்தியாவின் ஒன்பது ஆண்டு நிறைவயொட்டி பிரதமர் மோடி கூறியதாவது:
புதுமை, தொழில்முனைவு, வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக மறுவரையறை செய்த ஒரு மைல்கல் முயற்சியான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் உள்ளது. இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் அதற்கான தொழில் பாதுகாப்பு மையங்களும் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது. புத்தொழில் உலகில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு இளைஞர்க்கும் பாராட்டுக்கள். மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் இணைய வேண்டும் .
இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...