3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் பிப்., 15 முதல் பிப்.,25 வரை நடக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
உ.பி.,யின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாசார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022ல் துவங்கப்பட்டது. நவ.,16 முதல் டிச., 16 வரை நடந்த இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2023 டிச., 17 முதல் டிச., 30 வரை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் உ.பி., மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிப்.,15 முதல் பிப்., 25 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார். இதற்கான முன்பதிவு நடைபெறுவதாக கூறியுள்ள அவர், இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சியின் மையக்கருத்தாக, அகத்தியரின் தத்துவம் இருக்கும் எனக்குறிப்பிட்டார்.
3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள அகத்தியர் கோவில் மற்றும் சித்த மருத்துவம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்படும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் பிப்.,1. பிப்.,2 அன்று நடக்கும் வினாடி வினா நிகழ்ச்சி மூலம் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ள மத்திய அரசு, இந்த ஆண்டு 1,200 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...