ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
இதையடுத்து முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் https://upsc.gov.in/ எனும் வலைத்தளத்தில் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 12 முதல் 18-ம் தேதி வரை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...