இம்மாதம் 12 நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிகள் செயல்படும் சூழ்நிலை
இன்னும் சில தினங்களில் பொங்கல் வர உள்ளதால் தொடர் விடுமுறை வாய்ப்பு உள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு 17.01.2025 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடவும் பிறகு சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 17.01.2025ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது 13.01.2025 திங்களன்று மத விடுப்பு (RL&RH) உள்ளது. அதனை அரசு ஊழியர்கள் துய்க்கும் பட்சத்தில் 11.01.2025 முதல் 19.01.2025 வரை தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது
தொடர்ச்சியாக 12 பள்ளி வேலை நாட்கள்
அதே சமயத்தில் 20.01.2025 முதல் தொடர்ச்சியாக 31.01.2025 வரை தொடர்ச்சியாக பள்ளிக்கு வேலை நாட்கள் உள்ளது
ஏனென்றால் 17.01.2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் 25.01.2025 சனிக்கிழமை 12 நாளாக அரசு அறிவித்துள்ளது மேலும் 26.01.2025 ஞாயிறு அன்று குடியரசு தினம் என்பதால் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்
மேலும் அடுத்த திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ச்சியாக பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிக்கு வேலை நாளாக உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பணி திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(13.01.2025) ஒருநாள் மதவிடுப்பு (RL&RH) எடுத்துக்கொண்டால் (11.01.2025) முதல் (19.01.2025) வரை 9 நாள்கள் பொங்கல் விடுமுறை
அதன் பின் (20.01.2025) முதல் (31.01.2025) வரை 12 நாள்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு செல்லவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...