ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் |
குறள் எண்:946
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
பொருள்: செரிக்கும் அளவு அறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருப்பது போல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் இருக்கும்.
செய்வதை திருந்தச் செய்.
Whatever you do, do it properly.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி---மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. ஜம்மு காஷ்மீரின் ஆட்சி மொழி எது?
விடை :உருது.
2. உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது?
விடை: ஜப்பான்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்.
ஜனவரி 08
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
நீதிக்கதை
தெனாலிராமன் பூனை வளர்த்தது
விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார்.
தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.
கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.
பாலைக் கண்டதுமே அந்தப் பூனை பயத்துடன் ஓட்டமெடுத்தது.
தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான்.
இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...