உதவித்தொகை, மாணவர் சேர்க்கை, உதவி பேராசிரியர் பணி ஆகியவற்றிற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேசிய தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
முக்கியத்துவம்:
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை பெறவும், உதவி பேராசிரியராக பணிபுரியவும், ஜே.ஆர்.எப்., எனும் இளம் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு தகுதி பெறவும் அவசியம் எழுத வேண்டிய தேர்வு 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்'. ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 85 துறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு விபரம்:
இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வு இடைவேளையின்றி தொடர்ந்து 3 மணிநேரம் நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில் அனைத்து கேள்விகளும் கொள்குறிவகை வடிவில் கேட்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில், துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 75 சதவீத மதிப்பெண்களுடன் 4 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:
உதவி பேராசிரியர் பணி மற்றும் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக இத்தேர்வை எழுதுபவர்களுக்கு எந்த உச்சபட்ச வயதுவரம்பும் இல்லை. ஜே.ஆர்.எப்., உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கான அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகால தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
https://ugcnetdec2024.ntaonline.in/site/login எனும் இணையபக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 10
தேர்வு நாட்கள்:
2025 ஜனவரி 1 முதல் 19 வரை
விபரங்களுக்கு:
https://ugcnet.nta.ac.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...