நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..... நாகை மாவட்டத்தில் இயல்பான வாழ்க்கை திரும்பி உள்ளது. நாகை மாவட்டத்தில் 5400 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தது. நாகை மாவட்டத்தில் மழை பெய்தால் மழை பெய்து 15 நிமிடம் இடைவெளி விட்டாலே தண்ணீர் வடிந்து விடுகிறது. தற்போது வரை எந்த பாதிப்பும் அங்கு கிடையாது தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பயிர்கள் சேதம் இருந்தால் அந்த பாதிப்பு குறித்து கணக்கிடப்படும் அதன்பின் தேவையான நிவாரணம் விவசாயிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிதி நெருக்கடி இருந்த பொழுதும் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கினோம். அதேபோல அவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது அவர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. டெட் தேர்வுல் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...