தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் இன்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போதைய, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...