கடந்த 1986ம் ஆண்டு நிறுவப்பட்ட 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி', நாட்டிலேயே பேஷன் கல்வியை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக திகழ்வதோடு, ஜவுளி மற்றும் ஆடை துறைகளில் தேவையான நிபுணர்கள் மற்றும் மனித வளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த கல்வி நிறுவனம் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படுகிறது.
கல்வி வளாகங்கள்:
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி, காந்திநகர், பாட்னா, ஸ்ரீநகர், வாரணாசி உட்பட மொத்தம் 19 நகரங்களில் முழுமையான வளாகங்களை கொண்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.டெஸ்., - பேச்சுலர் ஆப் டிசைன்
பி.எப்.டெக்., - பேச்சுலர் ஆப் பேஷன் டெக்னாலஜி
எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்
எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட்
எம்.எப்.டெக்., - மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி
பிஎச்.டி.,
மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி வாயிலான மாணவர் சேர்க்கை என அனைத்து விதமான படிப்புகளுக்கும் என்.ஐ.எப்.டி., நுழைவுத் தேர்வு வாயிலாகவே தகுதியான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
சேர்கை இடங்கள்:
பல்வேறு உட்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மொத்தம் 4 ஆயிரத்து 837 இடங்கள் என்.ஐ.எப்.டி.இ.இ., தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
தேர்வு முறை:
ஜி.ஏ.டி., எனும் 'ஜென்ரல் எபிலிட்டி தேர்வு' கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படுகிறது. சி.ஏ.டி., எனும் 'கிரியேட்டிவ் எபிலிட்டி தேர்வு' பேனா மற்றும் காகித வடிவில் எழுத்துத்தேர்வாக நடத்தப்படுகிறது. படிப்பை பொறுத்து, தேர்வு வடிவம் மாறுபடுகிறது. கேள்விகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இடம்பெறுகிறது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்கள் உட்பட 82 பகுதிகளில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 6, 2025
தேர்வு நடைபெறும் நாள்:
பிப்ரவரி 9, 2025
விபரங்களுக்கு:
https://www.nift.ac.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...