கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது. காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மார்ட் கார்டு மூலம் காவலர் பயணிக்கலாம். வாரன்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீஸார், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கை மூலம் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அறிவுறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டிய இதுவரை பயணித்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் 2021 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமானது செயல்படாமல் இருந்த நிலையில் அதனை தற்போது செயல்படுத்த டி ஜி பி அவர்கள் உத்தரவிட்டிருப்பது காவல்துறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களை கண்டறிந்து டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸார், ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...